Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

குற்றவாளி சம்பிக்க ரணவக்கவை மன்றாடும் ஜே.வி.பி இன் பரிதாப நிலை

chandrasekar_jvpயாழ்ப்பாணத்தில் சுன்னாகத்திலிருந்து நடத்தப்பட்ட திட்டமிட்ட அழிப்பு தொடர்பாக இலங்கை அரசிற்கு ஆதரவளிக்கும் ஜே.வி.பி உம் கருத்தில் கொள்ள ஆரம்பித்துள்ளது. எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனனத்தின் உப நிறுவனமான நோதெர்ன் பவர் என்ற நிறுவனத்தின் மின்னுற்பத்தி முறையே இதற்குக் காரணம் என மக்களும் சமூக ஆரவலர்களும் கண்டறிந்தனர். இதன் தொடர்ச்சியாகப் பல தகவல்களை இனியொரு இணையமும், பறை-விடுதலைக்கான குரல் என்ற அமைப்பும் வெளிக்கொண்டுவனதன.
எம்.ரி.டி வோக்கேஸ் என்ற நிறுவனம் தொடர்பான தகவல்களை இலங்கை அரசியல் கட்சிகள் மூடி மறைத்து அதன் உப நிறுவனமான நோதேர்ன்பவர்ஸ் என்ற நிறுவனம் தொடர்பாகவே கேள்விகள் எழுப்பப்படுட்டு வருகின்றன. பாராளுமன்றத் தேர்தலில் வாக்குகளைப் பொறுக்கிக்கொள்வதற்காக கட்சிகளுக்குத் திடீர் அக்கறை பிறந்துள்ளது. பாராளுமன்ற ஜனனாயகத்திற்கு அப்பால் இத் திட்டமிட்ட அழிப்பிற்கு எதிரான பொதுவான போராட்டத் தளம் ஒன்று கட்டியெழுப்பப்பட வேண்டும். போர்க்குற்ற விசாரணையை தமது சொந்த இலாபங்களுக்காகப் பயன்படுத்திக்கொண்ட இனவாதிகளும் அவர்களின் எஜமானர்களான ஏகாதிபத்தியங்களும் சுன்னாகம் அழிவையும் பயன்படுத்தத் தலைபடுகிறார்கள் என்பதே இன்றைய உண்மை.
அரசியல் தலைமையும் நோக்கமும் அற்ற நிலையில் தமிழ்ப் பேசும் மக்கள் மீண்டும் ஏமாற்றப்படுகின்றனர். சுன்னாகம் கழிவு எண்ணைப் பிரச்சனை இன்று வாக்குப் பொறுக்கிகளுக்கு தீனி போடும் நிலை உருவாகியுள்ளது. தவிர, ஏகாதிபத்திய சார்பு இனவாதிகளும் தமது சொந்த நலன்களுக்காக இப்பிரச்சனையில் தலையிட ஆரம்பித்துள்ளனர். முதல் பகுதி பாராளுமன்றத் தேர்தல் வரைக்கும் இழுத்தடிக்கும். மறுபகுதி இப்பிரச்சனையை முன்வைத்து ஏகாதிபத்திய நாடுகளிடம் மக்களின் போராட்டங்களைக் காட்டிக்கொடுக்கும்.
வாக்குப் பொறுக்கிகளும், ஏகாதிபத்திய அடிவருடிகளும் மேற்கொள்ள ஆரம்பித்துள்ள பிரச்சாரத்தை உள்வாங்கி மக்கள் போராட்டமாக மாற்றுவது இன்றைய தேவை.
பல மைகள் தொலைவு வரை நீரும் நிலமும் நாசப்படுத்தப்பட்டு ஒரு குறித்த மக்கள் கூட்டத்தின் எதிர்காலம் கேள்விக்குறியானைமைக்கும் மின்வலு அமைச்சர் சம்பிக்க ரணவகவும் காரணம். சர்வதேசச் சட்டங்களின் அடிப்படையில் பல்வேறு சுற்றுச்சூழல் குற்றவாளிகள் தேடப்படுவருகின்றனர். சம்பிக்க ரணவக்க இக்குற்றவாளிகளிள் ஒருவர். தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியைப் பதவிவிலகக் கோருவதற்குப் பதிலாக அவரை இரந்துகேட்கும் பரிதாபகரமான நிலைக்கு ஜே.வி.பி தள்ளப்பட்டுள்ளது.
ஜே.வி.பி இன் உறுப்பினர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கௌரவ பாடலி சம்பிக்க ரணவக்க அவர்கள்,
மின்சார மற்றும் வலுசக்தி அமைச்சர்,
இல: 82, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,
கெழும்பு 07.

கௌரவ அமைச்சர் அவர்களே,
யாழ்ப்பாணம் நீர் மாசடைதல் தொடர்பான உண்மையை கண்டறிவதற்கான குழுவொன்றை நியமிப்பதற்காக கோரிக்கை.
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் நிறுவப்பட்டுள்ள வடபிரதேசத்திற்கான மின்னுற்பத்தி (Northern Power Comoany (pvt) Ltd) நிறுவனம் தொடர்பாக தற்பொழுது பாரிய கேள்வி எழுந்துள்ளது. மக்கள் உரிய நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள். அதனால் இந்த நிறுவனம் தொடர்பாக உண்மையை கண்டறியும் குழுவொன்றை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தையும், குற்றம் இழைக்கப்பட்டிருக்குமானால் உரிய நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையையும் எடுக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
அமைச்சரின் மேலதிக கவனத்திற்காக பின்வரும் விடயங்களையும் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
01. 30 ஆண்டுகளுக்கு மேலாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி வாழ் மக்கள் இனியிலா துன்பங்களை அனுபவித்து உயிர், உடமை அனைத்தையும் இழந்த நிலையில் இப்போதுதான் ஓரளவு தலைதூக்கி வாழ்க்கையை ஆரம்பிக்க தொங்கியுள்ளனர்.
02. யாழ்ப்பாண மக்களுக்கு கிணற்று நீர் என்பது அவர்களின் வாழ்வாதாரமாகும். அவர்களின் வாழ்க்கையுடன் பின்னிப பிணைந்திருக்கிறதொன்றால் அது மிகையாகாது.
03. யாழ் குடா முழுவதிலும் நிலத்திற்கடியில் சுன்னாம்பு நீர் படுகை அமைந்திருப்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.
04. கிணற்று நீரை நம்பி வாழும் வடபகுதி மக்கள் தாங்களின் குடிநீருக்கும் ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சுகின்றனர்.
அதனால் தற்போது சுன்னாகம் பிரதேசத்தில் தனியார் மின்னுற்ப்பத்தி (Northern Power Comoany (pvt) Ltd) நிறுவனத்திற்கு எதிராக பிரதேச வாழ் மக்கள் தமது கிணறுகளுக்கு கழிவு எண்ணெய் கசிவதாக கூறி பாரிய அமைதிப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். காரணம், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வேட்டு வைக்கும் திட்டமாக அதாவது தமது உயிரை காவு கொள்ளும் நிறுவனம் யமனாக வந்திருப்பதாகவே மக்கள் கருதுகிறார்கள்.
யாழ் குடாநாட்டில் சுன்னாகத்தை மையமாகக் கொண்ட நீர் படுக்கைகள் நஞ்சாக மாறியிருப்பதாகவும். அதன் காரணமாக பின்வரும் விளைவுகள் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் தெரியவருகிறது.
1. நீர் அருந்துபவர்களுக்கு புற்றுநோய் உருவாகும் அபாயம்.
2. பயிற்செய்கைகள் அழிந்துப் போகும் அபாயம்.
3. செம்மண் சார்ந்த வளமான நிலப்பகுதியாக இணுவில், உரும்பிராய், ஏழாலை, தௌ;ளிப்பளை, ஊரெழு பகுதிகளில் பயிர்செய்கை பாதிக்கப்படும் ஆபத்து.
அமைச்சர் அவர்களே,
இந்த நிலமைகளை கண்டும் காணதவர்கள் போலவே (Northern Power Comoany (pvt) நிறுவனம் செயற்பட்டு வந்திருப்பதாகவே தெரிகிறது. அவர்கள் இலாபம் ஈட்டுவதற்காக மக்களின் உயிரை பணயம் வைத்துள்ளனர். அது மட்டுமல்ல எதிர்கால தலைமுறையினரின் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். இந்த நிலமை இவ்வாறே தொடருமானால் எதிர்காலத்தில் பல விபரீதங்கள் இடம்பெறும் பிரதேசமாக வடபகுதி திழப்போவது தவர்க்க முடியாது.
அதனால் மேற்காணும் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளுங்கள், சுன்னாகம் பிரதேச வாழ் மக்களின் கருத்தக்களுக்கு செவிமடுங்கள், வடபகுதி வாழ மக்களின் உயிரை காப்பாற்றுங்கள், என்பதே அம்மக்களின் கோரிக்கையாகும். தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களுக்கு சாதகமாக அளிக்கப்பட்டுள்ள போதிலும், அதை நடைமுறைபடுத்துவதற்கு உரிய நிறுவனம் முன்வருமா? அல்லது அவர்களின் பின்னால் அதிகார கரங்கள் மோலோங்கி மக்களுக்கு பாதகமாக முடிவுகள் வருமா என்றக் கேள்வியும் எழுவதாக மக்கள் அஞ்சுகிகின்றனர்.
அமைச்சர் அவர்களே, நீதிமன்றத் தீர்ப்பையும் கவனத்தில் கொண்டு வடபகுதி வாழ் மக்களின் கிணற்று நீர் கழிவு எண்ணெக் கசிவால் மாசடைவதைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை வழங்கு வதற்குமான துரிதமாக உண்மையை கண்டறியும் குழுவொன்றை அமைத்து மக்களுக்கு நீதி வழங்குமாறு உங்களை வினயமாக கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
இப்படிக்கு
உண்மையுள்ள

இராமலிங்கம் சந்திரசேகர்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
மக்கள் விடுதலை முன்னணி.

தகவல்: சகல ஊடகங்களுக்கும்

Exit mobile version