2012 ஆம் ஆண்டிலிருந்கு இப் பேரழிவிற்கு எதிரான ஆதாரங்களைப் பலர் முன்வைத்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வழக்குத் தொடர்ந்தவர்களை மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனம் பயங்கரவாதிகள் எனப் போலிக் குற்றம் சுமத்தி மிரட்டுகிறது. சிலர் புலனாய்வுத் துறையால் மிரட்டப்பட்டுள்ளனர். பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பிரனரான நிர்ஜ் தேவா என்பவர் மின்னுற்பத்தி செய்யும் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர்.
மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் அங்கு அதிக மின்சாரத்தை வழங்கியது தாமே எனக் குறிப்பாகக் தனது உரையில் கூறியுள்ளார்.(மின்சாரம் தொடர்பாக 6:50 நிமிடத்தில் மகிந்த கூறுகிறார்; பார்க்க: இணைப்பு)
இதனூடாக வடக்கில் நீரை நச்சாக்கும் சமூகவிரோதச் செயலில் தான் பின்புலத்தில் செயற்பட்ட குற்றத்தை மகிந்த வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறார்.
மகிந்த பகிரங்கமாக தனது குற்றத்திற்கு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கும் போது எதிரணிப் பேரினவாதக் கட்சியன மைத்திரிபால அணி இது குறித்து மூச்சுக்கூட விடவில்லை என்பது வியப்பிற்கு உரியதல்ல. இடதுசாரி அணிகள் என்று கூறிக்கொண்டு சீரழிந்த முதலாளித்துவ ஜனநாயகத்தில் வாக்குப் பொறுக்க தயாராகியிருக்கும் இடதுசாரிக் கட்சிகளும் இது குறித்து எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, வாக்குப் பொறுக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது தெளிவாகின்றது.