
யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வைத்து பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நபர்கள் கூட 8 மாதங்களுக்கும் மேலாக யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சட்டத்தரணி ரெமேடியஸ் தெரிவித்துள்ளார். அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு சிங்கள நபரும் ஏழு தமிழர்களும் உள்ளடங்குவதோடு இவர்களுக்கு எதிராக பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட குற்றச் சாட்டுகளை விசாரித்த பின் அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்ட போதும் அவர்கள் இன்னும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சட்டத்தரணி மேலும் தெரிவித்தார். அத்தோடு யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்னும் நால்வர் தமக்கெதிரான முறைப்பாடுகள் எதுவுமே இல்லாமல் வருடக் கணக்கில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் 26 பேர் ஒழுங்கான முறையில் வழக்கு விசாரணைகள் நடத்தப்படாமல் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தமிழ்த் தெரிவித்துள்ளார்.