குறிப்பிட்ட ஒரு வேலையால் சமூகம் பெறுகின்ற பயன் என்ன என்று ஒரு புதிய வகையில் மதிப்பிடும்போது இவ்வாறான முடிவு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு துறைகளையும் சேர்ந்த ஊழியர்களால் சமூகம் பெறுகின்ற பயன் என்ன? அந்த ஊழியர்கள் பெறுகின்ற சம்பளம் என்ன? என்பவற்றை ஒப்பிட்டு தி நியூ எகனாமிக் பவுண்டேஷன் என்ற ஆய்வு மையம் மதிப்பீடு ஒன்றைச் செய்துள்ளது .
சுகாதாரம் அற்ற ஒரு மருத்துவமனையால் பரவக்கூடிய நோய்களினால் சமூகத்துக்கு ஏற்படும் செலவை கருத்தில் கொண்டு பார்க்கையில், அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் துப்புரவுத் தொழிலாளிக்கு கொடுக்கப்படுகின்ற ஒரு டாலர் சம்பளம், பத்து டாலர்கள் மதிப்புள்ள பயனை சமூகத்துக்கு அளிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
முதலீட்டு வங்கி வர்த்தகர் ஒருவர் பெரும் சம்பளம் பெறுபவர் என்றாலும், உலகப் பொருளாதாரமே பாதிக்கப்படுவதற்கு வழிவகுத்திருந்த வர்த்தக சந்தை ஸ்திரத்தமை குலைவுக்கு இவர்களும் ஒருவகையில் காரணமாய் இருந்துள்ளனர். அவ்வகையில் பார்க்கையில், இந்த வங்கி வர்த்தகர்கள் பெற்ற ஒவ்வொரு டாலர் சம்பளத்துக்கும் சமூகம் ஏழு டாலர்கள் மதிப்பை இழந்துள்ளது என இந்த ஆய்வு கூறுகிறது.
சமூகம் நிஜமாகவே பெற்ற பயனின் மதிப்பு இவ்வாறு இருக்கும்போது, இவர்களுக்கான ஊதியத்தில் மட்டும் ஏற்றத்தாழ்வு ஏன்? என இந்த அமைப்பு கேள்வி எழுப்புகிறது
BBC.