21.03.2009.
இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது இலங்கை அரசாங்கப் படைகள் தமது இராணுவ நடவடிக்கைகளை கடுமைப்படுத்தி வரும் நிலையில், அங்கு இன்றும் மோதல்கள் மிகவும் மோசமாக இருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
குறுகிப்போன ஒரு நிலப்பரப்பில் விடுதலைப்புலிகள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக கூறுகின்ற இலங்கை இராணுவ அதிகாரிகள் இன்றைய மோதலில் கொல்லப்பட்ட 5 விடுதலைப்புலிகளின் சடலங்களை தாம் மீட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இருந்த போதிலும், இந்த உயிரிழப்புகள் குறித்து சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என்பதுடன், இலங்கை இரராணுவத்தினர் தமது தரப்பு இழப்பு குறித்து எந்த விபரமும் தரவில்லை.