குடாநாட்டை அழிக்கும் மின்நிலையத்தில் ஆய்வு நடத்தி காலம் கடத்தப்படுகிறது
இனியொரு...
மின்வலு அமைச்சிலிருந்து அபிவிருத்தி திட்டப்பணிப்பாளர் சுலக்சன் ஜெயவர்;த்தன மற்றும் இலங்கை மின்சார சபையில் இருந்து மெண்டிஸ் உட்பட்ட குழுவொன்று சுன்னாகம் அனல் மின்னிலையத்திலிருந்து மக்கள் குடியிருப்புக்களை நோக்கி வெளியேற்றப்படும் நச்சுக்கழிவுகள் தொடர்பாக ஆராய்வதற்காக சுன்னாகம் சென்றிருந்தது. அக்குழு தமிழ்த் தேசியக் கூட்ட்மைப்பின் சரவணபவன் உட்பட்ப் பலரைச் சந்திதுப் பேச்சு நடத்தியுள்ளது.
கடந்தவாரம் மின் எம்.ரி.டி வோக்கஸ் இன் உப நிறுவனமான நோதேர்ன்பவர் நிறுவனத்தின் மின் உற்பத்தியை நிறுத்துவதாக உறுதியளித்த மின்வலு அமைச்சர் சம்பிக்க இப்போது குழுவை அனுப்பி ஆய்வு நடத்துவதாகக் கூறுகிறார். ஆய்வுகளின் அடிப்படையில் தண்ணீரில் நச்சு எண்ணையின் அளவு போன்ற விபரங்களைத் திரட்டி ஆவணப்படுத்தியிருந்தது. சம்பிக்கவிற்கு மேலும் என்ன ஆய்வு வேண்டிக்கிடக்கிறது என்று தெல்லிப்பளைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.
பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட ஆய்வுகள் சுன்னாகத்தின் நிலைமையைப் படம்போட்டுக் காட்டுகிறது.
சிங்கள பௌத்த அடிப்படைவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமையவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தேர்தல் ஆரம்பிக்கும் வரை ஆய்வு செய்வதாகப் படம் காட்டிவிட்டு தேர்தலின் பின்னர் கழிவு எண்ணையால் பாதிப்பு இல்லை என்ற முடிவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.