குஜராத் இனப்படுகொலை வழக்கில் அந்த மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடியைக் குற்றமற்றவர் எனத் தீர்ப்பு வழங்கிய நீதி மன்றம் 23 பேரை குற்றவாளிகளாக அறிவித்து செஷன்ஸ் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட 23 பேருக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
18 நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுள்ளது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் ரூ.5,800 அபராதம் செலுத்த வேண்டும் என்றும், 7 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் ரூ. 3,800 அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தவிட்டார்.
மோடியைக் காப்பாற்றிய இந்து பாசிச சட்டம் இந்தியாவில் பலர் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அப்சல் குருவுக்கும், கசாபுக்கும் தூக்கு தண்டனை விதிப்பதில் காட்டப்பட்ட நீதிமன்ற முனைப்பும் வேகமும், பால் தாக்கரே, அத்வானி, மோடி உள்ளிட்ட இந்து மதவெறி பாசிச கிரிமினல்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில்கூடக் காட்டப்படுவதில்லை.