Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

குஜராத்தில் தற்கொலை விகிதம் அதிகரிப்பு!

 

முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட தற் கொலைகள் 10.5 சதவீதம் அதிகரித்துள்ளதை தேசிய குற்றப்பதிவக அமைப்பு அறிக்கையில் தெரிய வந்தது.

கடந்த 2007-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் 5,580 தற்கொலைகள் நடந்துள்ளன. அதையடுத்து 2008-ம் ஆண்டில் தற்கொலைகள் எண்ணிக்கை 6,165 ஆக உயர்ந்தது.

முந்தைய ஆண்டு எண்ணிக்கையை விட 10.5 சத வீதம் இது கூடுதல் ஆகும். 2008-ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 1744 பேர் (28.3 சதவீதம்) வெளிவேலைக்கு செல்லாத, வீட்டு பணிகள் மட்டும் செய்து வந்த திருமணமான பெண்கள் ஆவார்கள்.

அகில இந்திய அளவில் தற்கொலை சராசரி 2.2 சதவீதமாக உள்ளது. அந்த ஆண்டில் இந்திய அளவில் ஏற்பட்ட தற்கொலைகளில் 4.9 சதவீதம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது. தற்கொலைகள் நிகழ்ந்த மாநிலங்கள் வரிசையில், குஜராத் 8-வது இடத்தில் உள்ளது.

 பி.ஜே. மருத்துவக்கல்லூரியின் உளவியல்துறை தலைவர் டாக்டர் வான்கர் கூறுகையில், தற்கொலை என்பது சிக்கலான மன அழுத்தம் மன இறுக்கத்தின் விளைவாக உள்ளது என்றார்.

பெண்கள் தற்போது வேலைக்கு செல்வதுடன் வீட்டுப்பணிகளையும் சேர்ந்து செய்ய வேண்டியுள்ளது. இதனால் பெண்கள் மனஅழுத்தம் அடைய வேண்டியுள்ளது என அவர் கூறினார்.

இந்தியாவுக்கு குஜராத் வழிகாட்டுகிறது என்று மோடி கூறி வருகிறார். எந்த விசயத்தில் என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

குஜராத் மாநிலம் தொழில் வளர்ச்சியில் முன்னணியில் உள்ளதாக தப் பட்டம் அடிக்கப்படுகிறது. ஆனால் வேலையின்மையும் அந்த மாநிலத்தில் தற்கொலை அதிகரிக்க காரணமாக உள்ளது என்று தொழிற்சங்க தலைவர் ஒருவர் கூறினார்.

Exit mobile version