39, கோவிந்தா வீதி என்னுமிடத்தில் அமைந்த்திருந்த தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பத்திரிகைக் காரியாலயம் கருணா குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும் கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களிடையேயான மோதல் மட்டுமே இது என்றும். இந்த விடையம் பெரிதல்லவென்றும் தெரிவித கருணா, சம்பவம் நடந்த வேளையில் பிள்ளையானுடன் சந்திப்பிலிருந்ததாகவும் இது தொடர்பாக இருவருக்கும் தெரிந்த்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவிக்கையில், ஆயுதம் தரித்த 30 கருணா குழுவினரால் முற்றுகையிடப்பட்ட காரியாலயம் உடனடியாகவே அவர்களின் கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 100 பிள்ளையான் தரப்பு ஆயுத தாரிகள் கட்டடத்தைச் சுற்றி வளைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அச்சகம் தற்போது முன்னைய நிர்வாகத் தலைமையின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற அதேவேளை முறுகலை தணிப்பதற்கும் இரு குழுக்களுக்குமிடையில் சுமுக நிலையை ஏற்படுத்துவதற்கும் பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க பேச்சு வார்த்தை இடம்பெற்று வருகின்றது. இதேவேளை, பத்திரிகைகள் தீயிடப்பட்டமை மற்றும் குழு மோதலின்போது 13 பிள்ளையான் குழுவினர் கருணா குழுவினரால் பணயக்கைதிகளாக வைத்திருப்பது குறித்தும் தமக்கு எதுவும் தெரியாது என பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்