பொதுவாக இராணுவக் குடும்பங்களைக் குடியமர்த்துவதற்காகச் சுவீகரிக்கப்படும் இக்காணிகளின் ஒருபகுதி பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகின்றது.
இலங்கை அரசின் இந்த இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடும் பொறிமுறைகள் எதனையும் தமிழ் மக்களின் தலைமைகள் கொண்டிருக்கவில்லை. இலங்கையின் பெரும்பகுதியானவர்கள் ராஜபக்ச பாசிஸ்டுக்களை எதிர்க்கும் நிலையிலும் அரசைப் பலவீனப்படுத்தும் நோக்கிலாவது மக்களை அணிதிரட்ட தயாரற்ற நிலையிலேயே அரசியல் தலைமைகள் காணப்படுகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை முதல்வர் சட்டரீதியாக அணுகுவதே உச்ச நிலைப் போராட்டம் என்று மக்களை வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்குமாறு அழைப்பு விடுக்கிறார்.
கீரிமலைப் பிரதேசத்தில் தமது நிலங்கள் ஆக்கிரமிக்கப்ப்படுவதை அறிந்த மக்கள் கீரிமலை நகர அபிவிருத்திச் சபை மண்டபத்தில் கூடினர்.
அங்கு பிரசன்னமான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வலி. வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் சட்டரீதியாக மக்களை அணுகுமாறு அறிவுறித்தினர்,
காணிகளின் உரிமையை நிலை நாட்டும் வகையில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வது இவர்கள் முடிவெடுத்து கூட்டத்தை நிறைவு செய்தனர்.
30 வருடப் போராட்டத்தின் இழப்பும் எரியும் மனங்களும், இரத்தாதல் குளிப்பாட்டப்பட்ட மண்ணும் இறுதியில் பேரினவாதச் சட்டங்களிடம் சரணடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காரணமானது.
புலம்பெயர் நாடுகளில் அனைத்து வழிகளிலும் பணம் சுருட்ட முனையும் தமிழ் அரசியல் தலைமைகள் இவற்றைக் கண்டுகொள்வதில்லை.