
இவரது உடல் கரிம் நகர் மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊரான பெட்டாப்பள்ளியில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
நகர் முழுவதும் என்றுமில்லாதவாறு காவற்படைகள் குவிக்கப்பட்டிருந்தன. பொதுவாக நகரில் நடமாடிய பெரும்பாலானோர் காவல்படைகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.பெருந்திரளான மக்கள் ஆதரவைக் கண்ட அரசியல்வாதிகளும் அஞ்சலி செலுத்த முன்வந்தனர். கிஷன்ஜீயின் இறுதி ஊர்வலத்தைப் பார்ப்பதற்காக மக்கள் வீடுகளின் மேலும், மரங்களிலும், உயரமான கட்டடங்களிலும் ஏறியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிஷன்ஜீயின் தாயார் அவரை 33 வருடங்களின் பின்னர் இறந்த உடலாகவே பார்க்க நேர்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த கிஷஞ் ஜீ அரசபடைகளால் கடத்தப்பட்டு சித்திரவதைகளின் பின்னர் படுகொலைசெய்யப்பட்டார்.
