
இஸ்லாமியத் தமிழர்கள் இலங்கை முழுவதும் தாமாகவே முன்வந்து போராட்டம் நடத்தும் போது சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அரசுடன் ஒட்டிக்கொள்வதே நியாயம் என்கிறார். அமைச்சுப் பதவியை துறந்தால் எமது மக்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கும் என யாராவது உத்தரவாதம் தருவார்களாயின் எனது அமைச்சுப் பதவியை துறக்கத் தயார் எனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம்இ அமைச்சுப் பதவியை அவ்வாறு துறந்தால் மேலும் எமது மக்கள் மீது அட்டூழியங்கள்இ தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்படப்கூடிய சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.இஸ்லாமியத் தமிழர்கள் சாரிசாரியாக அழிக்கப்படும் போது என்ன பாதுகாப்பு வேண்டிக்கிடக்கிறது என்றால் அல்லவின் பெயரால் மதவெறியைத் தூண்டுவார். சொந்த மக்களின் இறுதி இரத்தம் ஒட்டிக்கொண்டிருக்கும் வரை இலங்கை அரசின் அடிமையாக மண்டியிடுவேன் என்கிறார். அப்பாவி இஸ்லாமியத் தமிழர்களைச் சுரண்டிப் பிழைக்கும் இவரே கிழக்கு மாகாணத்திலிருந்து தோன்றிய இஸ்லாமியத் தமிழ்த் தலைமையை அரசுடன் இணைந்து அழிப்பதற்குக் காரணமானவர். ஹக்கீமின் தரகு முதலாளித்துவத் தலைமை தூக்கியெறியப்பட்டு உழைக்கும் இஸ்லாமியத் தமிழர்கள் தலைமையிலான சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.