கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் கடையடைப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தம்புள்ள பள்ளிவாசல் சம்பவத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது. அம்பாறை, மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படுகின்றது. பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கப் பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போக்குவரத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினரும் கூட்டாக இணைந்து பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.