இவர்களைச் சரணடையுமாறு கோரிக்கை விடுத்துள்ள புனர்வாழ்விற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி, சரணடைந்தவர்களுள் 8 ஆயிரம் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார். “புனர்வாழ்வு” வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுபவர்கள் அரச படைகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும் பலர் தற்கொலைசெய்து கொள்வதாகவும், பெண்கள் பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.