Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிழக்கு சீனாவில் மாபெரும் டைனோஸர் தளம் கண்டுபிடிப்பு:7600 டைனோஸர் எலும்புகள் மீட்பு!

01.01.2009.

சீனாவின் கிழக்குப் பகுதியில் என்றுமில்லாதவாறு அதிகளவு டைனோஸர் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஷாங்டொங் மாகாணத்தில் மட்டும் கடந்த மார்ச் மாதம் முதற்கொண்டு 7600 டைனோஸர் எலும்புகளை அகழ்ந்தெடுத்துள்ளதாக சீன விஞ்ஞான அக்கடமியைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.இந்த டைனோஸர் எச்சங்களை பயன்படுத்தி, அப்பிராணிகள் எவ்வாறு அழிவடைந்தன என்பது தொடர்பான மர்மத்தைக் கண்டறிய முடியும் என்பதில் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர்கள் கூறினர். மேற்படி டைனோஸர்களின் எச்சங்களைக் கொண்ட பிரதேசமானது  டைனோஸர் நகரம் என சிறப்பித்தழைக்கப்படுகிறது.

இதில் சுமார் 3000 டைனோஸர் எலும்புகள் ஒரே குழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டதாகவும் ஏனையவை அருகிலிருந்த இடங்களிலிருந்து பெறப்பட்டதாகவும் அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஷலோ ஸிகின் கூறினார்.

 

 

Exit mobile version