Sun Jul 20
கிழக்கு மாகாண சபையின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு போதிய நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை ஆளுநர் கொமடோர் மொஹான் ஜயவிக்கிர இந்தக் கோரிக் கையை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் கடந்த நவம்பர் மாதத்தில் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப் பட்ட போது, கிழக்கு மாகாணசபை இயங்காததால் அதற்கென நிதி ஒதுக்கீடு செய்யப் பட வில்லை.
கிழக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப் பட்டு நிர்வாகம் ஒன்று தெரிவுசெய்யப் பட்ட போதிலும் நிதி ஒதக்கீடு வழங்கப் படாததால் சபை தனது அலுவல்களை முழு அளவில் செயற்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்படு கின்றது.
இந் நிலையில் நிதி உதவி கோரி ஆளு நர் அவசர கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.
சேதமடைந்த வீதிகள், பொதுக்கட்ட டங்கள், சமயத்தலங்கள் போன்றவற்றை புனருத்தாரணம் செய்வதற்கும்
மாகாணசபைத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், முதலமைச் சர் மற்றும் அமைச்சர்களின் வாகனங்கள் , அலுவலகங்களை பராமரிக்கவும் பெருமள வில் நிதி தேவைப்படுகின்றது.
எனவே உடன் போதிய நிதியை வழங்க வேண்டும் என்று ஆளுநர் தமது கடிதத் தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதே வேளை
கிழக்குமாகாணசபையின் நிதி நெருக் கடி நிலைமை தொடர்பாக பேச்சு நடத்த நேரம் ஒதுக்கித் தருமாறு முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்கள் ஜனா திபதியிடம் கூட்டாக கோரிக்கை விடுத் திருக்கின்றனர்