முகாமைத்துவ பயிற்சி வழங்குவது தொடர்பாக கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை கடற்படையினருக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சார்பில் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி கி.கோவிந்தராஜாவும் இலங்கை கடற்படை சார்பில் பயிற்சி பிரிவு பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் எம்.யு.கே.வி.பண்டார ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
கிழக்குப் பல்லைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்தல் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நடைபெற்றது.
முகாமைத்துவம் சம்பந்தமாக கற்கைநெறிக்கு கிழக்குப் பல்கலைக்கழகத்தின்
திருகோணமலையிலுள்ள கடற்படை தளத்தில் இப்பயிற்சி நெறி நடாத்தப்படவுள்ளது.
அடுத்த இரண்டு வருடங்களுக்கு செயற்படுத்தத்தக்கதாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள போதிலும், இருதரப்பு உடன்படிக்கைக்கு அமைவாக நீண்ட கால செயற்பாட்டிற்கும் ஏதுவாக அமையும் என்று கூறுகின்றனர்.
கடற்படையினரின் பதவியுயர்விற்கு துணைபுரியும் இப்பயிற்சி நெறி கடந்த காலங்களில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை, குறிப்பாக அதன் வடக்கும் கிழக்கும் இராணுவத்தின் இருப்பிடமாக மாற்றப்படுகிறது, கல்வி, பொருளாதாரம். கலாச்சாரம் என்ற அனைத்தும் இராணுவமயமாக்கப்படுகிறது. இவ்வாறான ஹிட்லfர் ஆட்சியின் போதான இராணுவ மயமாக்கலை வெளிப்படுத்துவதும் அதற்கெதிரான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் இன்றைய கடமை. வியாபாரிகளின் கைகளில் விழுந்துள்ள அரசியல் இவற்ற மறைமுகமாக அங்கீகரிக்கின்றது.