இலங்கையின் கிழக்கு மாகாணமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தின் இன்று தேர்தல் நடைபெறுகிறது. வழமைபோல பாராளுமன்ற ஜனநாயகம் என்பது அன்னிய உளவு நிறுவனங்களினால் நிர்ணயிக்கப்படுகின்ற நிலையில் கிழக்குத் மாகாணசபைத் தேர்தல் நடைபெறுகிறது. கருணாவின் காட்டிக்கொடுப்பு, பிள்ளையானின் பிரதேசவாதம், சம்பந்தனின் அடிமைத்தனம் முஸ்லீம் காங்கிரசின் வியாபாரம் இனப்படுகொலை அரச அதிகாரம் ஆகியன மட்டுமே மக்களுக்கு தெரிவாகக் கிடைத்துள்ளன. புலம்பெயர் நாடுகளின் ‘தேசிய வியாபாரிகள்’ தொலைதூர காய் நகர்த்தும் நடவடிக்கைகளை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாட்களிலிருந்தே ஆரம்பித்துவிட்டனர். இத் தேர்தல் முடிவுகள் நாளை ஞாயிறு அதிகாலை ஆரம்பமாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.