காலை 9.00 மணியளவில் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்திலிருந்து ஆரம்பமான அமைதி ஊர்வலம், மகாஜனக் கல்லூரி வரை சென்று நிறைவுபெற்றது.
“பிள்ளைகளின் பாதுகாப்புக்காக ஒன்று திரள்வோம்” என்ற கோஷத்துடன் மட்டக்களப்பு சர்வோதயம் மற்றும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் சமாஜம் என்பன இணைந்து இப்பேரணியை நடத்தின.
இவ் ஊர்வலத்திலும் ஒன்றுகூடலிலும் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், கிழக்கு மாகாண சர்வோதய இணைப்பாளர் இ.எல்.ஏ.கரீம், மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செணவிரட்ன, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியின் மண்டபத்தில் விழிப்புணர்வு கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இணையத்தின் தலைவர் செல்வேந்திரன் கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையின் மனநோய் வைத்திய நிபுணர் கடம்பநாதன், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையத்தின் சிறுவர் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி, விழுது ஆற்றல் மேம்பாட்டு நிலையத்தின் மாவட்ட பணிப்பாளர் காசுபதி நடராசா, பெண்கள் சமாஜ தலைவி திருமதி சுகுமாரன் சௌந்தரராணி உட்பட மதத்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதன்போது சிறுவர் உரிமைகள் அவை பாதுகாக்கப்பட வேண்டிய வழிமுறைகள், இன்று சிறுவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கருத்தரங்கு இடம்பெற்றதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்விற்கு வருகை தந்த மக்கள் தொகையை வைத்துப் பார்க்கும் போது, மக்கள் போராடுவதற்கும் தயாரான நிலையிலேயே உள்ளனர். மக்களைது உணர்வுகளை ஏகதிபத்தியங்களிடம் பணம் பெற்றுக்கொள்ளும் தன்னார்வ என்.ஜீ.ஓ நிறுவனன்ங்கள் உள்வாங்கிக் காட்டிக்கொடுக்கின்றன. இன்று உலகம் முழுவதும் தாம் பணம் பெற்றுக்கொள்ளும் ஏகாதிபத்திய எஜமானர்களுக்குச் சார்பாக போராட்டங்களை முன்னெடுப்பதும் அவற்றை இறுதியில் கைவிடுவதும் போராடும் சக்திகளை அடையாளப்படுத்திக் காட்டிக்கொடுப்பதும் பெரும் சவாலாக உள்ளது.
சர்வோதயா, விழுதுகள் போன்ற தன்னார்வ நிறுவனங்கள் இலங்கையில் பெரும் பணச் செலவில் இயங்கும் நிறுவனனங்களாகும். இன்று இலங்கையில் ஒவ்வொரு தனிமனிதனும் குறைந்தது ஐந்து சமூக அபிவிருத்தி நிறுவனனக்களுட்ன் தொடர்பு உடைய நிலையில் உள்ளனர். புரட்சிகர சுலோகங்களுடன் முன்வரும் பல அமைப்புக்களும் கட்சிகளும் கூட தன்னார்வ தொண்டு நிறுவனனங்களின் கட்டுப்பாட்டினுளேயே ஏகாதிபத்திய நிதியுடன் இயங்குகின்றன. புலம் பெயர் நாடுகளில் புதிதாக முளைக்கும் அழிவு சக்திகளும் இவர்களோடு இணைந்து கொள்ள புரட்சியின் பெயரால் புதிய அழிவு திட்டமிடப்படுகிறது.
இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்கும் புதிய அமைப்புக்களும் குறித்த ஆய்வு ஒன்று இன்யொருவில் விரைவில் வெளியாகும்.