
சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் கணக்கிட முடியாத நிலை தற்போது நிலவுகின்றது என்று இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதுவரையில் 591 முகாம்களில் 3 இலட்சத்து 25 ஆயிரத்து 348 பேர் உள்ளதுடன் இவர்களுக்காக கடந்த 13 நாட்களில் 138 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மேலும் 75 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதே வேளை இலங்கையில் குறிப்பாக கிழக்கில் ஏற்பட்டுள்ல இயற்கை அனர்த்தங்கள் போரின் பின்னான மற்றொரு மனித அவலமாகக் கருதப்படுகிறது. வழமை போல இலங்கை அரசு இந்தச் சந்தர்ப்பத்தை தமது அதிகார, வியாபார நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகப் பயன்படுத்திக்கொள்கிறது. தவிர, புலம்பெயர் நாடுகளில் புலிசார், அரசு சார் தன்னார்வ நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த காலங்களில் மக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்த்யதாகக் கருதப்படும் பல தன்னார்வ நிறுவனங்கள் இப்போது மறுபடி அரங்கிற்கு வந்துள்ளன. குறிப்பாக இலங்கை அரச உளவாளி எனக் கருதப்படும் கே.பி உருவாக்கிய தன்னார்வ நிறுவனம் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் மக்களை உள்வாங்குவதற்கு இந்தச் சந்தப்ப்பத்தைப் பயன்படுத்துகிறது.
இலங்கையில் பல தனிநபர்களும் அமைப்புக்களும் உதவி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது.