Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிழக்கில் இனவாதத்தை முன்நிறுத்திப் பிரச்சாரம்

பிரதான அரசியல் கட்சிகள் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வருவதாக சிரேஸ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். அரசியல் நடத்துவதனை புறந்தள்ளி இனவாதத்தை முன்னிலைப்படுத்தி கட்சிகள் செயற்படுகின்றன.கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடவடிக்கைகளின் போது இதனை தெளிவாக பார்க்க முடிகின்றது. இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டை மீண்டும் நெருக்கடி நிலைக்கு இட்டுச் செல்லும்.
முதலமைச்சர் சிங்களவரா, முஸ்லிமா அல்லது தமிழா என்ற அடிப்படையில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.
இது ஓர் ஆரோக்கியமான நிலைமையாகக் கருதப்பட முடியாது.
ஆளும் கட்சி உள்ளிட்ட நாட்டின் சகல பிரதான அரசியல் கட்சிகளும் இனவாத அடிப்படையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன என திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
மகிந்த அரச பாசிசத்தின் இடதுசாரி முகவராகத் தொழிற்படும் திஸ்ச விதாரண இனவாதப் பிரச்சாரத்தின் ஊற்றுமூலம் பேரினவாதம் என்பதைத் தெரிந்தும் குறிப்பிடுவதில்லை.

Exit mobile version