கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பிலான இறுதித் தீர்மானத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் முஸ்லிம் காங்கிரஸ் வாக்குறுதி அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பிற்கு இரா.சம்பந்தனும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ரவூப் ஹக்கீமும் தலைமைதாங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.