Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிளினொச்சியில் இராணுவ நினைவுத் தூபி : தொடரும் சிங்கள மயமாக்கல்

வன்னிப் போரில் கொல்லப்பட்ட இராணுவத்தினரை நினைவு கொள்ளும் விதமாக கிளிநொச்சி நகரத்தில் டிப்போ சந்தியில் உள்ள சந்திரன் பூங்காவில் மற்றொரு நினைவுத் தூபி பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கான பூங்காவாக பல வருடங்களாக இயங்கிய சந்திரன் பூங்காவை தமீழ விடுதலைப் புலிகள் கடந்த 2007ஆம் ஆண்டில் மீள புனரமைப்புச் செய்து பல உபகரணங்களை பொருத்தியிருந்தனர்.
குறித்த சிறவர்களின் பூங்கா அமைந்திருந்த காணி தற்பொழுது இராணுவ நினைவுத் தூபி அமைக்கப்ட்ட நிளைவு வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி அறிவமுது சந்தியில் இருந்து இரணைமடுச் சந்திவரையான பகுதியினை முழுமையான போக்குவரத்துக்குத் தடை செய்திருந்த படையினர் பல மணி நேரமாக குறித்த பாதையினை முற்றாக மூடியிருந்தனர்.
வீதியின் இருமருங்கிலும் பெளத்த தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டு சந்திரன் பூங்காவைச் சூழ உள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

Exit mobile version