கிளிநொச்சியினை சேர்ந்த சிலருக்கு இந்த காச்சல் தொற்றியுள்ளதாகவும் இதனால் இந்த காய்ச்சலினை இனம்காணமுடியாதிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரகாலமாக பரவிவரும் ஒருவகைக் காய்ச்சலினால் நேற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் இக்காய்ச்சலினால் மரணமானவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
இது வரை கண்டுபிடிக்கப்படாததாகக் கருதப்படும் இக் காய்ச்சலுக்கான மூல காரணம் போரில் இலங்கை அரசினால் பிரயோகிக்கப்பட்ட மனிதப் பேரழிவு ஆயுதங்களாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
இது பரவுமானால் பேரழிவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர் ஒருவர் எச்சரிக்கிறார். புத்திஜீவிகள் என்ற பெயரில் புலம் பெயர் குழு ஒன்று முஸ்லீம்கள் மீள் குடியேற்றப்படாமைக்கு வடக்கு தமிழர்களைக் குற்றம்சாட்டும் நிலையில், புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் புலிகளின் பணத்தை முன்வைத்து மோதிக்கொள்ளும் நிலையில் இப் பேரழிவுகளை வெளிக்கொண்டுவரும் தகவுகள் அருகியே காணப்படுகின்றன. திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பை மேற்கொள்ளும் இலங்கை அரசு இவ்வாறான நோய்களை எதிர்ப்பின்றி ஊக்கப்படுத்தும் நிலையே காணப்படுகின்றது.