Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிறிஸ்தவ பயங்கரவாதி டெர்ரி ஜோன்ஸ்.

இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் நகலை எரிக்கத் திட்டமிட்டிருந்த ஃபுளோரிடா நகர பாதிரியார், தனது முடிவை கைவிடுவதாக அறிவித்துள்ளார். ஃபுளோரிடாவில் உள்ள சிறிய சர்ச் ஒன்றின் பாதிரியாரான டெர்ரி ஜோன்ஸ், இரட்டைக் கோபுரத் தாக்குதல் தினமான செப்டம்பர் 11 தாக்குதலின் 9-வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் நகலை எரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தார். இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் குரான் எரிப்புத் திட்டத்தை கைவிடுவதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நியுயார்க்கில் உலக வர்த்தக மையக் கட்டடம் இருந்த இடத்துக்கு அருகில் கட்ட திட்டமிடப்பட்டிருந்த இஸ்லாமிய மையத்தையும், மசூதியையும் வேறு இடத்துக்கு மாற்ற உறுதி அளிக்கப்பட்டதால் குரான் எரிப்புத் திட்டத்தை கைவிட்டதாகத் தெரிவித்தார். எனினும் மசூதியை வேறு இடத்துக்கு மாற்ற உறுதி அளிக்கப்பட்டதாக அவர் கூறுவதை அந்த இஸ்லாமிய மையம் உடனடியாக மறுத்துள்ளது. இந்நிலையில் டெர்ரியின் அறிவிப்பிற்கு ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் 16ம் பெனடிக்ட் கண்டித்துள்ளார் என்று மதங்களுக்கிடையே கலந்துரையாடலுக்கான போப் குழு அலுவலகம் வெளி யிட்ட அறிக்கை கூறுகிறது.குறிப்பிட்ட மதத்தினரால் புனிதமானது என்று கருதப் படும் ஒரு நூலை எரிப்பது மூர்க்கத்தனமானது என்றும், அபாயகரமானது என்றும் அக்குழு கூறியுள்ளது. செப்டம் பர் 11 நிகழ்வுகளுக்கு எதிர்வினையாக இதைச் செய்யக் கூடாது என்றும் அறிக்கை கூறுகிறது. செப்டம்பர் 11 தாக் குதலால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஐக்கியமாக நிற் பதும், இறந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வதுமே செப்டம்பர் 11 அன்று நடைபெற வேண்டிய பொருத்த மான செயல்களாகும் என்றும் அறிக்கை கூறுகிறது.ஒவ்வொரு மதத் தலைவரும், விசுவாசியும் அனைத்து வகை வன்முறைகளையும் கண்டிப்பதாக மறு உறுதி எடுத் துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறைகளைக் கண்டிக்க வேண்டும் என்றும் அறிக்கை கூறுகிறது. உலகெங்கும் உள்ள கிறிஸ் தவர்கள் ஜோன்ஸின் திட்டங்களை எதிர்க்கிறார்கள் என்று வாடிகன் செய்தித்தாள் ஆசர்வடோர் ரொமானோ செய்தி வெளியிட்டுள்ளது.

Exit mobile version