Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை: இத்தாலி கவலை.

03.9.2008.

ரோம்:

இந்தியாவின் கிழக்கில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்து இத்தாலி கவலை தெரிவித்துள்ளது. இத்தா லியில் உள்ள இந்திய தூதரிடம் இதுபற்றி கூறியுள்ளதாக இத்தாலி அயல்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

மதங்களுக்கு இடையே நடக்கும் கலவரங்கள் பற்றி தீவிரமான உணர்வுகளும் ஆழ்ந்த கவலையும் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் இறந்துள்ளனர் என்றும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

ஒரிசாவில் விஎச்பி, பஜ்ரங்தள் உள் ளிட்ட இந்து தீவிரவாத அமைப்புகள் மாவோயிஸ்டுகளால் லட்சுமணானந்தா சரஸ்வதி கொல்லப்பட்டதை சாக்காகக் கூறி சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது வன்முறை யைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 23 முதல் நடைபெறும் வன்முறைகளில் 36 பேர் கொல்லப் பட்டனர்.

கொலை வெறியாட்டம் நிறுத்தப் பட்டதாக அதிகாரிகள் கூறிய போதும் திங்களன்றும் நான்கு தேவாலயங்கள் எரிக்கப்பட்டன என்று இத்தாலிய செய்தி நிறுவனம் ஏஎன்எஸ்ஏ கூறி யுள்ளது.

மன்மோகன்

வாய் திறந்தார்

ஒரிசா கலவரம் குறித்து மவுனம் காத்த மன்மோகன் சிங் பேசத் தொடங்கி யுள்ளார்.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலவரங்களை ஒடுக்கும்படியும், கொலை, கொள்ளைக்கு காரணமானவர் களைத் தண்டிக்கும் படியும் அதி காரிகளிடம் அவர் கூறியுள்ளார் என்று அதிகாரிகள் கூறினர்.

கடந்த வாரம் ஒரிசா வன்முறைக ளுக்கு போப் கண்டனம் தெரிவித்தார்.

Exit mobile version