Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிர்கிஸ்தான் ஜனாதிபதி தலைநகரை விட்டு ஓட்டம்:எதிர்க்கட்சியினர் கையில் ஆட்சி!

 கிர்கிஸ்தானில், ஜனாதி பதி குர்மன்பெக் பாகியெவ் தலைநகர் பிஸ்கெக்கை விட்டு வெளியேறி, தெற்கே உள்ள ஓஷ் நகரில் தஞ்சம் புகுந்துள்ளார்.

வியாழனன்று (ஏப்ரல் 8) காலை 8 மணிக்குள்ளாக பிஸ்கெக் நகரில் உள்ள ஏராளமான அரசு அலு வலகங்களை எதிர்க்கட்சி யினர் கைப்பற்றி விட்டனர். ஜனாதிபதியின் கொடுங் கோலாட்சியையும் ஊழ லையும் நுகர்பொருள் விலை உயர்வையும் எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தின் விளை வாக ஜனாதிபதி பாகியெவ் தலைநகரை விட்டு வெளி யேறிவிட்டார்.

கிர்கிஸ்தான் காவல் துறை பீதியுற்று நிற்கிறது. அதனைத் தலைமைதாங்க யாரும் இல்லை. பல இடங் களில் காவல்துறையினரின் ஆயுதங்களை போராளிகள் பிடுங்கிக் கொண்டுவிட்ட னர். நாள் முழுவதும் நடை பெற்ற வன்முறைகளில் 40க்கும் மேற்பட்டோர் மாண்டுள்ளனர் என்றும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் செய்திகள் கூறுகின்றன. அரசை எதிர்த்து ஆவேச மாகத் திரண்ட மக்கள் மீது கலக எதிர்ப்பு காவல்துறை யினர் ஐந்து சுற்று துப்பாக் கிச் சூடு நடத்தியுள்ளனர்.

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ரோஸா ஓடுன்பயேவா தலைமை யில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என்று எதிர்க்கட்சிகளின் கூட் டணி அறிவித்துள்ளது. தற் போது மக்கள் அரசின் கை களில் அதிகாரம் உள்ளது என்று ரோஸா ஓடுன்ப யேவா தொலைக்காட்சியில் உரையாற்றிய போது கூறி னார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என்றும் ஆறு மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என்றும் எதிர்க்கட்சிகளின் கூட் டணி கூறியது.

அமெரிக்காவின் ஆதர வுடன் மத்திய ஆசியாவில் நடத்தப்பட்ட வண்ணப் புரட்சிகளில் துலீப் புரட்சி, கிர்கிஸ்தானில் 2005ம் ஆண் டில் நடத்தப்பட்டது. முன் னாள் சோவியத் குடியரசு களில் ஜனநாயகம் மீண்டும் நிறுவப்படும் என்ற உறுதி யுடன் ஆட்சி பீடமேறிய பாகியெவ் ஆட்சியில் கிர் கிஸ்தானில் மனித உரிமை கள் அழிக்கப்பட்டன. 2009ம் ஆண்டில் நடந்த மோசடி தேர்தலில் பாகி யெவ் மீண்டும் வெற்றி பெற்ற போதும் நாட்டில் அமைதி திரும்பவில்லை.

Exit mobile version