தவிர, பின்வரும் வங்கிகளும் இதே தர இறக்கத்தை வெவ்வேறு அளவுகளில் சந்தித்துள்ளன.:JPMorgan, Goldman Sachs, Morgan Stanley and Citibank, BNP Paribas, Société Générale , Deutsche Bank of Germany, Swiss investment banks UBS, Credit Suisse.
கடன் மற்றும் அவர்களது நிதி வலிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த தர நிர்ணயம் மேற்கொள்ளப்படுகிறது.
ஏகாதிபத்தியங்கள் உதிர ஆரம்பித்துவிட்டன என்பதற்கான தெளிவான குறியீடுகள் இவை. ஐரோப்பிய வலயப் பொருளாதார நெருக்கடியின் அடுத்த பகுதியாக பிரித்தானியா பெரும் பாதிப்பிற்கு உள்ளாகலாம் என எதிர்வு கூறப்படுகிறது. வீட்டுச் சந்தை நெருக்கடியிலிருந்து பிரித்தானியப் பொருளாதார நெருக்கடி ஆரம்பமாகும் என பொதுவாக பொருளாதார ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.