வறுமையின் சுமையால் கிரேக்கத்தில் முன்னெப்போதும் இல்லாதவாறு தற்கொலைகள் அதிகரித்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நாணய நிதியும் (EU, IMF) புதிய 130 பில்லியன் யூரோ பிணையெடுப்பு நிதி கொடுக்கப்படுவதற்கு முன் ஏதென்ஸ் “முன்னுரிமைகொடுக்கப்பட்ட நடவடிக்கைகள்” என்று எடுக்கப்பட வேண்டியது குறித்து ஒரு பத்துப் பக்கப் பட்டியிலைக் கொடுத்துள்ளன. இவற்றுள், மூன்று ஆண்டுகளுக்குள் இன்னும் 150,000 வேலைகள் அகற்றப்பட வேண்டும், பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்புப் வரவு-செலவுத் திட்டங்களில் பெரிய குறைப்புக்கள் வேண்டும், மற்றும் “அமைப்பு மூடல்கள்” எனப்படும் கிரேக்கத்தின் 750 யூரோ குறைந்தப்பட்ச மாத ஊதியத்தில் குறைப்பு, தனியார் துறை ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்டுவரும் இரு மாத மேலதிக கொடுப்பனவு அகற்றப்படுதல் ஆகியவை அடங்கும்.