Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிரேக்கத்தில் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் மீது தாக்குதல்

27.06.12- கிரேக்கத்தில் ஏதன்ஸ் நகரில் மைக்ரோ சொப்ட் தலைமையகத்தில் பாரிய குண்டுவெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது. தீமூட்டும் சாதனங்களுடன் பிரதான நுளைவாயில் ஒன்றினூடாக வாகனம் ஒன்றில் உள் நுளைந்த தீ மூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
பிரதான வாயிலில் காவலுக்கு நின்ற காவலர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய வானில் வந்தவர்கள் அவர்களை அப்புறப்படுத்திவிட்டே வாகனத்தை உட்செலுத்தி தீ மூட்டியுள்ளனர்.
கிரீஸ் போலீசாரின் கணிப்பின் அடிப்படையில் வானில் மூன்று பேர் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். நாடுகளை ஆக்கிரமிக்கும் பின்புலத்தில் இயங்கும் பல் தேசிய நிறுவனங்களுள் மைக்ரோ சொப்ட் முன்னணி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version