Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிரேக்கத்தில் சோசலிஸ்டுக்களின் முன்னணி வெற்றி

சிஸ்ராவின் தலைவர் அலெக்ஸ் சிப்ராஸ்
சிஸ்ராவின் தலைவர் அலெக்ஸ் சிப்ராஸ்

கிரேக்கத்தில் நடைபெற்ற ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தலில் ‘தீவிர இடதுசாரிக் கட்சியான’ சிர்ஸா வெற்றிபெற்றுள்ளது. 2004 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இடதுசாரிகளின் கூட்டுமுனணியான சிர்ஸாவில் கிரேக்க கம்யூமிஸ்ட் கட்சியான மாவோயிசக் கட்சி, தொழிலாளர் கட்சி ஆகியன பெரும்பான்மையானவை. தங்கவிடியல் என்ற நிறவெறி பாசிசக் கட்சி எழுச்சிபெற்ற நிலையில் சிர்ஸா பாராளுமன்ற அரசியலில் நுளைந்தது(2012). ஜேர்மனிய அரசாங்கம் மற்றும் பல்தேசிய வியாபார நிறுவனங்களால் ஆதரிக்கப்பட்ட வலதுசாரிக் கட்சியான புதிய ஜனநாயக கட்சிகு அடுத்தபடியான அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது.

பிரான்ஸ் நாட்டில் நவ நாசிக் கட்சியான தேசிய முன்னணியும், பிரித்தானியாவில் ஐக்கிய ராஜ்ய சுதந்திரக் கட்சியும் வெற்றிபெற்றது போன்றே, கிரேக்கத்தில் நவநாசி பயங்கரவாதக் கட்சியான தங்கவிடியல் என்ற குழு மூன்று ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றுள்ளது.

சிர்சாவிற்கு 30.2 வீதமான வாக்குகளும் நாஸிக் கட்சிக்கு 9.1 வீதமான வாக்குகளும் கிடைக்கபெற்றன. தவிர, 39 Syriza வயதான இன் தலைவர் அலெக்ஸ் சிப்ராஸ் நாட்டின் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை மீண்டும் நடத்துமாறு அழைப்புவிடுத்துள்ளார்.

பாராளுமன்ற சர்வாதிகாரத்தை தனது வழிமுறையாக ஏற்றுக்கொள்ளுமாயின் சிர்சா சீரழிந்த முதலாளித்துவக் கட்சியாகவு முடிவடையும், தவிர, கிரேக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தப் போராடும் ஏனைய தலைமறைவு அமைப்புக்களை ஒடுக்கும் நிலைக்குத் தள்ளப்படும்.

Exit mobile version