மூன்றாம் உலக நாடுக ளில் காணப்படும் வறுமை மற்றும் அவலமான சூழல் தங்கள் நாட்டில் நிலவு வதை-தங்களின் கண்களால் காண்பதை நம்ப முடியவில் லை என்றும் ஹெலினா ஸ்மித் தெரிவிக்கின்றார். முன்பு பெருமை நாடாகத் திகழ்ந்த கிரீஸ் நாட்டில் ஐந் தாவது வருடமாக தொட ரும் பொருளாதார வீழ்ச்சி கள் காரணமாக வறுமை பெருகியும், வேலைவாய்ப் புகள் குறைந்தும் வரும் சூழல் சமுதாயத்தை பிளவு படுத்தி வருகிறது. மத்திய தர மக்கள் பொருளாதார சுமை காரணமாக வீழ்ச்சியை சந் தித்து வருகின்றனர். இச்சூழ லில் மக்கள் பசியால் வாடு வதும், குடும்பங்கள் உடை வதும், கணவன் மற்றும் மனைவியால் குழந்தைக ளின் தேவைகளைப் பற்றிச் சிந்திக்க முடியாத தன் மையே நிலவுகிறது என்கி றார் குடிமைப்பணியாளர் களின் சங்க பொதுச் செய லாளர் இலியாஸ்.
சமீப காலம் வரை மௌ னமாக ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச நிதி மை யத்தின் கட்டளைகளுக்கு பணிந்து பொருளாதார மாற்றங்கள், வெட்டு நட வடிக்கைகளை பின்பற்றி வருகிறது கிரீஸ். இந்தச் சூழலில் பலர் புதிதாக பிறக் கும் குழந்தைகளை மருத் துவமனைகளின் வாசல்கள் மற்றும் தொண்டு நிறுவனங் களில் ஒப்படைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள் ளனர். வறுமையின் காரண மாக சுமார் 500 குடும்பங் கள் தங்களின் குழந்தை களை தொண்டுநிறுவனங் களிடம் பாதுகாப்பாக ஒப் படைத்துள்ளன என்று கிரீஸ் நாட்டின் பத்திரிகை கள் தெரிவிக்கின்றன. மது பானப் பிரியர்களின் எண் ணிக்கை அதிகரிப்பு, போதை அடிமைகள் மற்றும் மன நிலை பாதிப்புகள் காரண மாக பல குழந்தைகள் கை விடப்படும் நிலையும் அதி கரித்து வருகிறது. தற்போ தைய பொருளாதார நெருக் கடி காரணமாக கெட்ட நிலையில் இருந்து மோச மான நிலைக்கு மக்கள் தள் ளப்பட்டுள்ளனர். இந்நிலை யில் கிரீஸ் நாட்டின் மருத் துவக் கட்டமைப்புகள் கடு மையான பொருளாதார வெட்டுகள் காரணமாக மோசமான நிலையில் உள் ளது என்று ஹெலினா ஸ்மித் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.