மருத்துவ உபகரணங்கள், மருந்து வகைகள், விவசாய உபகரணங்கள், இரசாயனப் பொருட்கள் போன்றவற்றின் இறக்குமதி வர்த்தகத்திலும் மக்வூட்ஸ் ஈடுபட்டுள்ளது. மலிவான கூலியை ஏகாதிபத்திய நாடுகளுக்கு விற்பனைப் பொருளாக ஏற்றுமதி செய்யும் மக்வூட்ஸ், வெளி நாட்டு உற்பத்திகளுக்கு இலங்கையில் தரகர்களாகவும் செயற்படுகிறது.
பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்குச் சென்று ராஜபக்சவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய இளவரசர் சார்ள்ஸ், மக்வூட்ஸ் தேயிலைத் தொழிற்சாலைக்குச் சென்று தேனீர் பருகி மகிழ்ந்தார்.
மக்வூட்ஸ் என்ற பல்தேசிய நிறுவனம் அரசியல் செல்வாக்கு மிக்கது. ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் மக்வூட்ஸ் அதிகாரத்தின் பாதுகாவலர்களாக வாழ்ந்துள்ள ஏராளமான வரலாறு உண்டு.
மக்வூட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கிரிஸ் நோனிஸ். இவர்த்தான் பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதர். நோனிஸ் இப்போது பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இன்று வரைக்கும் ராஜபக்ச குடும்பத்தின் ஊதுகுழல் போலச் செயற்பட்டவர்க் நோனிஸ். இனப்படுகொலையை நியாயப்படுத்தும் பணியைச் செவ்வனே செய்து முடித்தவர். மகிந்த ராஜபக்சவின் நண்பரான மக்வூட்ஸ் தலைவர் கிரிஸ் நோனிஸ் ராஜபக்சவின் மற்றொரு வியாபாரி நண்பனான சஜின் வாஸ் என்பவரால் நியு யோர்க்கில் நடந்த களியாட்ட உணவு வைபவம் ஒன்றில் நையப் புடைக்கப்பட்டார்.
பரம்பரை வியாபாரக் குடுமபத்தைச் சேர்ந்த சஜின் வாஸ் குணவர்த்தன பல்வேறு வர்த்தக நிறுவனங்களோடு தொடர்புடையவர். ஹேலிஸ் நிறுவனம், துபாய் நாட்டில் ரிக்கோ நிறுவனம் போன்றவற்றின் பங்காளி.
நியூ யோர்க்கில் ராஜபக்ச கடந்தவாரம் தங்கியிருந்த போது சஜின் வாஸ் மற்றும் கிரிஸ் நோனிஸ் ஆகியோர் விருந்து வைபவம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அங்கு சஜின் வாஸ் கிரிஸ் நோனிஸ் உடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். குடிபோதையில் இருந்தவர் கிரிஸ் நோனிசைத் தாக்கியுள்ளார். தமது அடிமைகள் மோதிக்கொண்டதையிட்டு ராஜபக்ச துயர் கொள்ளவில்லை இதனால் மனமுடைந்த நோனிஸ் தூதுவர் பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.