Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிரிமினல் கோட்டாபயவின் அமைப்பான BBS இன் பயங்கரவாதத் தாக்குதல்

bbs_attack1
தாக்குதலுக்கு உள்ளான சிறுவன்

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளாரான கோட்டாபய ராஜபக்ச என்ற அமெரிக்காவினால் தயாரித்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட கிரிமினலின் ஆதரவில் இயங்கும் பொதுபல சேனா என்ற நாஸி அமைப்பு முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறை தொடர்கிறது. அலுத்கம என்ற முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தில் பொது பல சேனா என்ற பௌத்த அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் முஸ்லீம் மக்கள் மீதும் அவர்களின் உடமைகள் மீதும் கட்டவிழ்த்துவிட்ட கொலைவெறியாட்டம் ஏனைய இடங்களிலும் பரவியது.

பொது பல சேனாவின் செயலாளர் பயங்கரவாதி ஞானராச தேரர் தாக்குதலுக்கு முன்பாக வன்முறையைத் தூண்டும் வகையில் உரையாற்றினார். சிங்களத்தில் அமைந்துள்ள உரை செய்தியின் முடிவில் இணைக்கப்ப்பட்டுள்ளது.

அளுத்கம இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடலோர நகரமான அழுத்கம இலங்கையின் மேற்குப் பகுதியில் அமைத்துள்ளது. கொழும்பிலிருந்து 60 மைல் தூரத்தில் அமைந்துள்ள அழுத்கமவில் முஸ்லிம்களும் சிங்கள பௌத்தர்களும் நீண்டகாலமாக வாழ்கின்றனர்.
சில நாட்களின் முன்னர் அப்பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரின் வாகனச் சாரதிக்கும் சில இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பை இன்று பௌத்த பயங்கரவாதிகள் மக்கள் மீதான வன்முறையாக மாற்றியுள்ளனர்.

வாகனச் சாரதியோடு சிறிய கைகலப்பில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம் இளைஞர்கள் எனிம்பதால் அது பௌத்த பயங்கரவாதிகள் வன்முறையில் ஈடுபட வசதியானதாக மாறியது. இதனைக் கண்டிக்கும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிரான முழக்கங்களை முன்வைத்தவாறு பௌத்த பயங்கரவாதிகள் குழுவான பொதுபல சேனா ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. முஸ்லீம்களுக்குச் சொந்தமான கடைகளைத் சூறையாடியது. பல வர்த்தக நிலையங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

தீவைக்கப்படும் பள்ளிவாசல்

அளுத்கம தர்கா நகரில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் இரண்டை பௌத்த பயங்கரவாதிகள் தீவைத்துக்கொழுத்தியுள்ளனர். அளுத்கம பகுதியில் தாக்குதலைப் பார்வையிடச் சென்ற ஜே.வி.பி செயலாளர் அனுரகுமார திசாநாயக்கவை உள்ளே செல்லவிடாமல் பாதுகாப்புப் படைகள் திருப்பி அனுப்பியுள்ளன. இந்த கொலைவெறித் தர்ப்பாரில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் அகதிகளாகப் பல இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் பேருவளையில் மசூதி ஒன்றின் மீதும் மக்கள் குடியிருப்பின் மீதும் சிங்கள பௌத்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து கிடைத்த தகவலின்படி  தெஹிவளையிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பிரபல மருந்தகம் (ஹார்கோட்ஸ்) ஒன்றின் மீது இனவெறியர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் குறித்த மருந்தகத்தின் ஒரு பகுதிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

மகிந்த – கோட்டாபய கும்பல் முஸ்லீம்கள் மீதான இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிடுவதன் ஊடாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வ முயற்சிக்கின்றது.

இலங்கையில் தலிபான் அமைப்பு செயற்படுகிறது என்று இன்டர்போல் இலங்கைக்கு அறிவித்த 24 மணி நேரத்திற்குள் இத்தாக்குதல்கள் மக்கள் மீது நடத்தப்பட்டுள்ளன.

பௌத்த பயங்கரவாதிகளின் வன்முறை இடம்பெற்ற பகுதிகளிலெல்லாம் ஊரடங்குச் சட்டம் பிறப்பித்துள்ளதாக போலிஸ் கூறுகிறது. யுத்தக் கிரிமினல் கோட்டாபய ஆதரவு வழங்கும் அமைப்பின் அருவருக்கத்தக்க பௌத்த பயங்கரவாதம் அப்பாவி மக்கள் மீது நேரடி வன்முறைகளிப் பிரயோகிக்கும் நிலையில் ஊரடங்கு பலனற்றது.

இலங்கையில் முஸ்லிம் தமிழ்த் தேசிய இனம் சிங்கள பௌத்தப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைக்கு இன்று நேற்றல்ல 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே உட்படுத்தப்படுகின்றது. ரவூப் ஹக்கீம் போன்ற கொழும்புசார் தரகு முதலாளிகள் முஸ்லிம்களின் தலைமையைத் தமது கைகளில் எடுத்துகொண்டு இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுகின்றனர். முஸ்லீம்கள் மத்தியிலுள்ள ஏனைய மக்கள் பிரிவுகளை ஒடுக்குவதற்கு இலங்கை அரசுடன் இணைந்து செயற்படும் இத் தலைமைகள் தூக்கியெறியப்பட்டு முஸ்லீம்கள் தமது சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

Exit mobile version