Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிரிமினல்கள் மைத்திரியுடன்; அப்பாவிகள் சிறையில்!

bbsஇலங்கையில் பிரிவினை கோருவது தடைசெய்யப்பட்டுள்ளது; ஆனால் பிரிவினையைத் தூண்டும் சிங்கள பௌத்த பாசிஸ்டுக்கள் தடைசெய்யப்படவில்லை. ராஜபக்ச அரசின் துணைப் பாசிசக் குழுவாகச் செயற்பட்ட நோர்வே அரசின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்ட பொதுபல சேனா இலங்கை அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவைச் சந்தித்துப் பேசியுள்ளது.

பல்வேறு குற்றச் செயல்களுடன் நேரடியான தொடர்புடைய இந்த அமைப்பினர் மைத்திரியைச் சந்திப்பதற்கான அனுமதி கோரப்பட்ட போது அது வழங்கப்பட்டுள்ளது. மைத்திரிபால சிரிசேனவைச் சந்தித்த பொதுபல சேனா இலங்கையில் முஸ்லீம்கள் பெருகிவருவதாகவும் சிங்கள பௌத்தம் அழிந்து வருவதாகவும் அதற்கு எதிராக நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்குமாறும் கோரியுள்ளது.

அதே வேளை இலங்கையில் இஸ்லாமியத் தீவிரவாதம் பெருகிவருவதாகவும் பொதுபல சேனா குற்றம் சுமத்தியுள்ளதாக இணையத்தளம் ஒன்று தெரிவிக்கிறது.

இலங்கையில் தீவிர குற்றச் செயல்களில் அமைப்புரீதியாக ஈடுபட்ட பாசிச அமைப்பான பொதுபல சேனா மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமை சந்தேகத்திற்குரியது.

நல்லாட்சி என்ற பெயரில் நடைபெறும் ஏகாதிபத்தியங்களின் சூறையாடலில் பொது பல சேனாவின் பங்கு இன்னும் தேவையாக சிங்கள பேரினவாதத்தால் உணரப்படுவதை இவை காட்டி நிற்கின்றன.

குற்றங்கள் சுமத்தப்படாத தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் வதைக்கப்படும் போது, நல்லாட்சி, நல்லிணக்கம் தொடர்பாகப் பேசும் ஏகாதிபத்திய அடிவருடிக அரசு பொதுபல சேனா போன்ற கிரிமினல் குழுக்களுடன் பேச்சு நடத்திக்கொண்டிருக்கிறது.

மைத்திரியுடனான பேச்சுக்கள் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக பொதுபல சேனாவின் தலைவர் கிரிமினல் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version