இரு அவைகளிலும் அமளி…..
இதனால் மத்திய உள்துறை அமைச்சரான சிதம்பரம் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாநிலங்களவை 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
எப்ஐஆர் வாபஸ் ரத்து: இதனிடையே, ஹோட்டல் அதிபர் மீதான எப்ஐஆர்-ஐ வாபஸ் பெறுவதாக எடுக்கப்பட்ட முடிவை தில்லி அரசு ரத்து செய்தது. அவர் மீதான விசாரணை வழக்கம் போல தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு துணை நிலை ஆளுநர் தேஜிந்தர் கன்னா ஒப்புதல் அளித்திருப்பதாக தில்லி அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போதே கிஷன்ஜீ என்ற தலைவர் சிதம்பரத்தின் உள் துறை அமச்சால் கொலை செய்யப்பட்ட அதே வேளை குற்றவாளிகளைக் காப்பாற முற்படும் கோளைத்தனம் அரங்கேறுகிறது.