09.01.2009.
உலக நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் கியூப அரசு மக்கள் நலனை உறுதிப் படுத்தியுள்ளது என்று அமெரிக்க தொழிற்சங்க தலைவர்கள் குழு பாராட்டு தெரிவித்துள்ளது.
கியூப புரட்சி வெற்றியின் 50வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமெரிக்க தொழிற்சங்கத் தலைவர்கள் அடங்கிய குழு ஒன்று ஹவானா வந்துள்ளது. மக்கள் கண்ணியமான, நிலையான, பாதுகாப்பான வாழ்க்கை நடத்துவதற்கு தேவையான வேலை வாய்ப்பினை உருவாக்கித்தரும் கியூப அரசின் செயல்பாட்டை அக்குழு பாராட்டியது என்று கியூப மத்திய தொழிலாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை கூறியது.
உலக நிதி நெருக்கடியின்போது வங்கிகளைக் காப்பாற்ற பல கோடி டாலர்களை அள்ளிக்கொடுக்க முன் வந்த அமெரிக்க அரசு வங்கி ஊழியர் களைப் புறக்கணித்துவிட்டது என்று அவர்கள் அமெரிக்க அரசை விமர்சித் தனர். கியூபா மீதான பொருளாதாரத் தடையை அவர்கள் கண்டித்தனர். குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் கல்வி ஆகியவற்றில் அமெரிக்க அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் அரசைக் குற்றம்சாட்டினர்.
உருகுவே பாராட்டு
வரலாற்றுச் சிறப்புமிக்க கியூப பொன் விழாவுக்கு, உருகுவே ஜனாதிபதி டாபரே வாஸ்குவஸ் பாராட்டு தெரி வித்தார். உருகுவே சோசலிஸ்ட் கட்சி தனது வாழ்த்துக்களை உருகுவே வந் துள்ள கியூப தூதுக்குழுவிடம் தெரிவித் துள்ளது.
சோசலிஸ்ட் கட்சி விடுத்துள்ள அறிக்கையில், அமெரிக்க பொருளாதாரத் தடையை எதிர்ப்பதுடன், கியூப மக்களும், அரசும் நடத்திவரும் போராட்டங்களுக்கு துணை நிற்பதாக உறுதி அளித்துள்ளது. கண் மருத்துவத்தில் கியூபா அளித்துவரும் உதவிக்கு உருகுவே சோசலிஸ்ட் கட்சி நன்றி தெரிவித்ததுடன் அமெரிக்க பொரு ளாதாரத்தடையை நிராகரிப்பதாகவும் கூறியது.
உருகுவே வாழ் கியூப மக்கள் ஒரு அர சியல் கலாச்சார இரவை நடத்தி கியூப புரட்சி பொன்விழாவை கொண்டாடினர். இடதுசாரி அமைப்புகளும், கியூபா ஒற்றுமை அமைப்புகளும் பங்கேற்ற மாபெரும் பேரணி ஒன்றும் மான்டேவிடியோவில் நடைபெற்றது.