Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கியூபா ஆதரவு தீர்மானம் : அமெரிக்க தடையை விலக்கக்கோரி 17-வது முறையாக நிறைவேறியது.

31.10.2008.

சோசலிச கியூபா மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் விதித்துள்ள பொரு ளா தாரத் தடைகளை நீக்க வலியுறுத்தி ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறை வேறியது.

ஐ.நா. சபையில் இப் படி தீர்மானம் நிறை வேற் றப்பட்டிருப்பது இது 17-வது முறை என்பது குறிப் பிடத்தக்கது.

கடந்த 46 ஆண்டு களாக, சின்னஞ்சிறு தீவு நாடான கியூபா மீது பொருளாதார மற்றும் வர்த்தக நிதி தடைகளை அமெரிக்கா செயல்படுத்தி வருகிறது. இதன் விளைவாக கியூபா பல லட்சம் கோடி டாலர் அளவிற்கு பெரும் பொருளாதார சேதத்தை சந்தித்துள்ளது. அது மட்டு மின்றி சமூக, சுகாதார, எரி சக்தி மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியில் பெரு மளவிற்கு ஏற்பட்டிருக்க வேண்டிய முன்னேற்றம் தடுக்கப்பட்டுள்ளது. இந்த தடைகளை உடனடியாக நீக்க வலியுறுத்தி ஒவ் வொரு ஆண்டும் ஐ.நா. சபை, ஏகமனதாக (அமெ ரிக்கா தவிர) தீர்மானம் நிறைவேற்றி வருகிறது. வியாழனன்று ஐ.நா. பொதுச்சபையில் இதற் கான தீர்மானத்தை கியூப அயல்துறை அமைச்சர் பெலிப் பெரேஸ் ரோக் கொண்டு வந்தார். தீர்மா னத்திற்கு ஆதரவாக 185 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், பலாவ் ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் உள்ளிட்ட 185 நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது.  மைக்ரோனேசியா, மார் ஷல் தீவுகள் ஆகியவை வாக் கெடுப் பில் பங்கேற்கவில்லை.

ஐ.நா. சபையும் தொடர்ந்து தடையை நீக்க வேண்டும் என கடந்த 16 வருடமாக அமெரிக்காவை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் 17வது வருடமாக அமெரிக்காவின் பொருளாதார தடையை நீக்க வேண்டும் என ஒருமித்த குரலில் ஐ.நா.  சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஆனால் கடந்த 16 வருடங்களாக ஐ.நா.வின் தீர்மானத்தை கண்டுகொள்ளாமல் விட்டதைப் போல இந்த முறையும் புஷ் நிர்வாகம் இந்தத் தீர்மானத்தையும் சட்டை செய்யாது என எதிர்பார்க்கப்படுகிறது.

கியூபா மீதான தடையை நீக்க அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களான ஓபாமா மற்றும் மெக்கெய்ன் ஆகியோர் எதி்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மெக்கெய்ன், கியூபா மீதான தடையை மேலும் இறுக்கமாக்க வேண்டும் என வலியுறுத்தி
வருகிறார்.

ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம் ஒரு சம்பிரதாய தீர்மானமே தவிர இதை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version