Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கியூபாவின் வளர்ச்சியும் உலகின் ஆதரவு சக்திகளும்: எஸ்.கண்ணன்

கியூபா கடந்த 48 ஆண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளா தாரத் தடையையும் நேர்முக, மறைமுகத் தொல்லைகளையும் எதிர்த்து போராடி வருகிறது. கியூபாவுடன் வர்த்த கம் செய்து வந்த சோவியத் யூனியன் சிதறிய போது, கியூபாவும் சிதறும் என்று அமெரிக்கா கனவு கண்டது. நடந்தது நேர்மாறானது ஆகும். கியூபா தனது பொருளாதார வளர்ச்சி, எண்ணெய், எரிபொருள், மின் சாரம், உணவுப்பற்றாக்குறை என பலவற் றில் கடும் நெருக்கடியைச் சந்தித்தது. ஆனாலும் சோசலிஸத்திற்கான பாதை யில் இருந்து விலகவில்லை. உலகின் பல நாடுகளின் கம்யூனிஸ்ட் இயக்கங்களும், ஜனநாயக சக்திகளும் கியூபாவிற்காக ஆதரவுக் கரம் நீட்டினர். ஃபிடல் திறந்த மனதுடன் சோசலிஸத்தை காக்க தனது மக்களுக்கும், உலகின் நேச சக்திகளுக் கும் விடுத்த வேண்டுகோள் பலனளித் தது. 1995 ல் உலகளவிலான நேச சக்தி களை கியூபாவிற்கு வரவழைத்து, தனது நாட்டு மக்கள் சிறப்பு கட்டம் (ளயீநஉயைட யீநசiடின) என்று அறிவிக்கப்பட்ட கால கட்டத்தில் அறிவிக்கப்பட்ட பற்றாக்குறைகளை ஏற்றுக் கொண்டதையும், மின்சாரம், உணவு உள்ளிட்ட பற்றாக்குறை துன்பங் களை எதிர் கொள்வதையும் விளக்கினார். அது துவங்கி, கண்டங்கள் வாரியாக கியூபா ஆதரவு மாநாடு நடைபெற்று வருகிறது.

சோசலிஸ கியூபாவை பாதுகாக்கிற நடவடிக்கைகளை இத்தகைய நேச சக்திகள் பகிரங்கமாக மேற்கொள்கின் றன. ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான கியூபா ஆதரவு மாநாட்டிற்கான வாய்ப்பு வாசலை, இந்தியத் துணைக் கண்டமே துவக்கியது. 1995ல் கொல்கத்தாவில் இடதுசாரி கட்சிகளின் முன் முயற்சியின் காரணமாக இந்த மாநாடு சிறப்புற நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வியட் நாமிலும், மூன்றாவதாக சென்னையிலும், நான்காவதாக கொழும்புவிலும் நடை பெற்றுள்ளது. ஒவ்வொரு மாநாட்டிலும் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக் கையும், இயக்கங்களின் எண்ணிக்கை யும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உலகில் உள்ள 145 நாடுகளில் இருந்து 2030 சகோதரத்துவத்தை வெளிப்படுத் தும் ஆதரவு இயக்கங்கள் தங்கள் அமைப் பின் சார்பில் கியூப ஆதரவு நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளன. ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் 3வது மாநாடு சென்னையில் நடைபெற்றபோது, 109 நட்புக்குழுக்கள் மட்டுமே இருந்தன. நான்காவது மாநாடு கொழும்புவில் துவங்கியபோது, 206 நட்புக்குழுக்கள் 21 நாடுகளில் இயங்கி வருகின்றன.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் சொந்த மண்ணில் வேறு, வேறு திசை யில் இயங்கி வரும் இயக்கங்கள் கூட, கியூபாவுக்காக ஆதரவுக்கரம் நீட்டுவ தில் ஒன்றுபட்டு நிற்கின்றன. அந்த அளவுக்கு கியூப புரட்சியும், அதைத் தொடர்ந்த செயல்பாடுகளும், உலக இயக்கங்களை ஆகர்ஷிப்பதாக அமைந் துள்ளது. ஒரு முறை நிகரகுவா நாட்டின் மக்கள் நலன் காக்க, கியூப மருத்துவர்கள் அனுப்பப்பட்டனர். அமெரிக்காவின் படைகள் கியூப மருத்துவர்களை அச் சுறுத்த வேண்டும் என்ற நோக்கில், 5 பேரைக் கொலை செய்தது, அதைத் தொடர்ந்து யாரும் நிகரகுவாவிற்கு போகமாட்டார்கள், என எதிர்பார்த்தது. மாறாக கியூப வெளியுறவுத்துறை அமைச் சகத்திற்கு முன்பு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், திரண்டு நிகரகுவா செல்லும் விருப்பத்தைத் தெரிவித்தனர். அந்த அளவுக்கு அரசியல் புரிதல் கொண்டவர்களாக கியூப மருத்துவர்கள் உள்ளதை பார்க்க முடியும். உலகின் நட்பு வட்டத்தை விரிவாக்குவதில் அரசு மட்டும் ஆர்வம் கொண்டிருக்க வில்லை. ஒட்டு மொத்த மக்களும் அதற்காக நிற்கிறார்கள், செயல் படுகிறார்கள்.

மனித நேயத்தில் உயர்ந்த நாடு

1995ல் 2.5 சதமாக இருந்த கியூபா வின் பொருளாதார வளர்ச்சி தற்போது 12 சதமாக உயர்ந்தது. தனக்கு வழங்கிய ஆதரவுகளை கியூபா பயன்படுத்தியதும், உள்நாட்டு வளர்ச்சிக்காக, மிகச் சரியாக திட்டமிட்டு பணியாற்றியதுமே இத்த கைய வளர்ச்சிக்கு காரணம்.

இதன் காரணமாக கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது. கியூப நாட்டு மருத்துவர்கள் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பணி புரிந்துள் ளனர். உள்நாட்டு சண்டைகள், இயற்கை, பேரிடர் போன்ற துயரங்களில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து, மக்களைக் காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள் ளனர். சமீபத்தில் கேத்ரீனா உள்ளிட்ட புயல்கள் அமெரிக்க கடலோரத்தைத் தாக்கிய போது, மருத்துவர்களை அனுப் பிட கியூப அரசு முன்வந்தது. ஆனால் அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. அதேபோன்ற புயல்கள் (ஆல்ஃபா, வில்மா போன்றவை) கியூபாவைத் தாக் கிய போது, அமெரிக்காவை விடவும் விரைந்து செயல்பட்டு சேதாரங்களைச் சரி செய்தது கியூபா. உலகின் பல நாடு களைச் சார்ந்த மாணவர்கள் கியூபாவில் இலவச கல்வி பெற முடிகிறது.

உலகம் முழுவதும், மேலாதிக்கத்தை நிலைநாட்ட துடிக்கும் அமெரிக்கா, பல அறிவியல் கண்டுபிடிப்புகளை, உயிர் காக்கும் மருந்துகளை விற்று வருகிறது, என்பது ஊர் அறிந்த உண்மை. ஆனால் கியூபா உலகில் யாருமே கண்டு பிடிக் காத மார்பகப் புற்று நோய்க்கான மருந் தை கண்டறிந்துள்ளது. அதை அமெ ரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் பயன்படுத்த பகிரங்க வேண்டு கோள் விடுத்தது. இங்கு அமெரிக்கா என்பதை மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்ட காரணம், கியூபா மீது அமெரிக்கா பொரு ளாதாரத் தடை விதித்துள்ளது. 48 ஆண்டுகளாகத் தொடரும் இந்த தடை காரணமாகவே கியூபா வறுமையை எதிர் கொள்ள வேண்டி வந்தது. இருந்த போதி லும், அமெரிக்க அரசையும், கொள்கை களையும், ஏக போக முதலாளிகளையும் தான் கியூபா வெறுக்கிறதே யொழிய அமெ ரிக்க மக்களை அல்ல, என்பதை தனது செயல்களில் நிரூபிக்கிறது. ஆனால் அமெரிக்காவோ, கியூபாவின் ஒட்டு மொத்த மக்களையும் திட்டமிட்டு வஞ் சிக்கிறது.

கியூபாவின் இத்தகைய மனித நேயம் காரணமாகவே, இன்று உலகின் அணி சேரா நாடுகளின் தலைமைப் பொறுப் பினை ஏற்றிருக்கிறது. உலகின் பல்லா யிரக்கணக்கான குழுக்களை ஏகாதிபத் தியத்திற்கு எதிராக முழக்கமிடச் செய்தி ருக்கிறது. 1998ம் ஆண்டில், கியூபாவைச் சார்ந்த 4வயது சிறுவன் ஏலியன் ஒரு விபத்தில் தனது அம்மாவை இழந்த கார ணத்தால், அமெரிக்காவின் மியாயில் உள்ள அவன் உறவினர்கள், அவனை அமெரிக்காவிலேயே வைத்துக் கொள்ள விரும்பினர். அமெரிக்கா அச்சிறுவனைக் கொண்டு, கியூப எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு திட்டமிட்டது. ஆனால் சிறுவனின் தந்தை மகனை கியூபாவிற்கு அழைத்து வர முயற்சி செய்தார். அதன் காரணமாக கியூப அரசு மக்களை திரட்டி நடத்திய போராட்டங்களால் 2000மாவது ஆண் டில் ஏலியனை தாய்நாட்டிற்கு அனுப்ப அமெரிக்கா சம்மதித்தது.

இப்போது, கியூபாவிற்கு எதிரான சதியை முறியடித்த காரணத்திற்காக, கியூப இளைஞர்கள் ரெனே, அந்தோ னியா, ஃபெர்னான்டோ, கெரார்டோ மற்றும் ராமோன் ஆகிய 5 பேரை கடந்த 10 ஆண்டுகளாக சிறையிலடைத்து கொடுமைப்படுத்துகிறது அமெரிக்கா. அவர்களின் தாய், தந்தையர், மனைவி ஆகிய யாரையும் சிறையில் சந்திக்கக் கூட அனுமதிப்பதில்லை.

1995ல் கியூபாவின் பொருளாதார தேவைக்காக துவக்கப்பட்ட சகோதரத் துவம் படிப்படியாக கியூபாவின் உரிமை களைக் காத்திடும், அரசியல் உரிமை களை காத்திடும் தேவைக்கான சகோ தரத்துவமாக மாறி வருகிறது. கியூபாவுக் கான நட்புறவு குழுக்கள், தங்கள் அமைப்புகளில், கியூபாவின் வளர்ச்சி குறித்தும், அரசியல் நிலை குறித்தும் தொடர்ச்சியாக விவாதிப்பதன் காரண மாக கியூப புரட்சியை பாதுகாக்கும் உலக சக்திகளாக மாறிக் கொண்டு வரு கின்றன.

இத்தகைய செயல்கள், அமெரிக்கா வின் கனவுகளை சிதைக்கிறது, என்பதே உண்மை. சோசலிஸத்தைக் காக்கும் கரங்கள் பல நூறு கோடிகளாக பெருகி வருவதும் உண்மை.

(“கியூப புரட்சியின் 50 ஆண்டுகள் சாதனைகளும், சவால்களும்” எனும் தலைப்பில் பல நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றியதைத் தொகுத்து எழுதப்பட்டது).

Exit mobile version