காசா பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடு “தார்மீக ரீதியில் நியாயப்படுத்த முடியாதது” என்று அவர் கூறியிருக்கிறார்.
தான் வருத்தத்துடனே பதவி விலகுவதாகவும், ஆனால்,காசா குறித்த அரசின் தற்போதைய கொள்கை, பிரிட்டனின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதாகத் தான் நம்புவதாகவும், வார்சி, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருக்கிறார்.
டேவிட் கமரனின் அமைச்சரவையில் 2010 ஆம் ஆண்டின் முதலாவது அமைச்சரவை அமச்சராகப் பதவியேற்ற வார்சி முதலாவது பெண் அமைச்சரானார். டேவிட் கரமரனுக்கு நெருக்கமான அமைச்சர்களில் ஒருவரான வாரி சட்டவல்லுனராகத் தொழில் பார்த்தவர். வரலாறு முழுவதும் இஸ்ரேலிய சியோனிய அரசிற்கு பிரித்தனிய அரசு பின்புலத்தில் செயற்பட்டு பாலஸ்தீனியர்களை அழிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளாமலா வார்சி ரோரிக் கட்சியுடன் இணைந்துகொண்டார் என்பது பலரதும் கேள்வி.