Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காஸா நிர்மூலமாக்கப்பட்டது, 77 பொதுமக்கள் பலி : ஐ.நா மௌனம்

அமரிக்க்க ஐரோப்பிய அரசுகளின் நட்பு நாடான இஸ்ரேல் பலஸ்தீனின் காசாப் பகுதிகள் மீது குண்டுத் தாக்குதல்கள் நடத்திவருகின்றது. குழந்தைகள் பெண்கள் என 77 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 500 பேர்வரை காயமடைந்துள்ளனர். இதை வேளை தரைவழித் தாக்குதல்களை நடத்துவதற்காக பாலஸ்தீனிய எல்லைகளில் இஸ்ரேலிய இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. தரவழித் தாக்குதல்களைக் கைவிடுமாறு இஸ்ரேலை பிரித்தானியா ‘கேட்டுக்கொண்டுள்ளது’. காசா நகரம் முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலியப் போர்க்கப்பல்கள் காசாமீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துவிட்டன. சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை நடத்தப்போவதாகக் கூறும் புலம் பெயர் அமைப்புக்கள்,வன்னியில் நடைபெற்றதைப் போன்ற தாக்குதல்கள் நடைபெறும் போது ஒரு அறிக்கை கூட வெளியிடாமல் தமது மாவீரர் வியாபாரத்தில் தீவிரமாக மூழ்கிவிட்டன.

Exit mobile version