கஷ்மீfரில் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடிவரும் இயக்கங்களில் ஒன்றான ஜயிஷ்-இ-முகம்மது அமைப்பின் தளபதிகளில் ஒருவரான காரி யாசிர் சுட்டுக்கொல்லப்பட்டார் என இந்திய இராணுவம் அறிவித்துள்ளது. பலத்த துப்பாக்கிச் சண்டையில் இவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கஷ்மீரில் குப்வாரா மாவட்டத்திலேயே இக் கொலை நடைபெற்றுள்ளது. இந்திய அரசின் துணையோடு ஈழப் போராட்டம் அழிக்க்ப்பட்ட பின்னர் இந்திய மற்றும் ஏகாதிபத்திய அரச சார்புக் குழுக்கள் ஆயுதப் போராட்டத்திற்கு எதிர்காகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த நிலையில் மக்களின் எழுச்சியோடு இணைந்த காஷ்மீர் மக்களின் போராட்டம் அழிவுகளை எதிர்கொண்டு வளர்ச்சியடைந்து வருகின்றது.