காஷ்மீர் மக்களின் சுயாட்சிக்கான போராட்டத்தை தனது ஆக்ரமிப்பு இராணுவத்தைக் கொண்டு கொடூரமான அடக்கியும் ஒடுக்கியும் வருகிறது இந்திய. அரசு. இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தான் அரசும் காஷ்மீர் மக்களின் சுயாட்சி உரிமை அங்கீகரிக்காமல் அதை இந்தியாவுக்கு எதிரான கத்தியாக காஷ்மீரை பயன்படுத்தி வருகிற நிலையில் நாளுக்கு நாள் காஷ்மீர் நிலமைகள் புதிய போராட்ட வடிவங்களைப் பெற்று வருகிறது. நாள் தோறும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு காஷ்மீர் மக்கள் கொல்லப்பட்டனர். பாரமுல்லா மாவட்டம், பல்ஹலான் கிராமத்தில் பலியான நால்வரையும் உயிரி ழந்தோரின் சேர்த்து எண்ணிக்கை 69 ஆக உயர்ந்தது. ஸ்ரீநகரில் நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசித் தாக்கினர். நொவட்டா காவல் நிலையம் மீது கும்பல் தாக்குதலில் ஈடுபட் டது.இந்நிலையில், ஸ்ரீநகர் பகுதியில் ஊர டங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலை யில் உள்ளார். இதனிடையே, ரம்ஜான் விழாவிற்கான பாதுகாப்பிற்குத் தேவையான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்த னர்.