Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காஷ்மீர் பாகிஸ்தான் சதியாம்- காங்கிரஸ், பிஜேபி ஒரே குரலில்.

காஷ்மீர் பிரச்னையில், பின்னணியில் இருந்து பாகிஸ்தான் செயல்படுகிறது என மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் .சிதம்பரம், எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி ஆகியோர் குற்றம்சாட்டினர். பல்வேறு பிரச்னைகளில் எதிரெதிர் நிலையைக் கொண்டுள்ள காங்கிரஸýம், பாஜகவும் இப் பிரச்னை தொடர்பாக ஒரே விதமான கருத்தை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் பிரச்னை தொடர்பாக மாநிலங்களவையில் .சிதம்பரம் வெள்ளிக்கிழமை பேசியதாவது: காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் தனது உத்தியை மாற்றிக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. பயங்கரவாதிகளை அனுப்புவதைவிட சாதாரண மனிதர்களை கிளர்ச்சி செய்யத் தூண்டுவதன் மூலம் அதிக பலன் கிடைக்கும் என பாகிஸ்தான் கருதத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், நாம் அனைவரும் முனைந்து வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஜம்முகாஷ்மீர் மக்களின் மனதை வெல்வது மிக முக்கியம். இப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காணமுடியும். ஏற்கெனவே தொடங்கிய அமைதிப் பேச்சு, ஒரு தலைவர் மீதான கொலைவெறித் தாக்குதலைத் தொடர்ந்து 2009 டிசம்பர் 4-ல் தடைப்பட்டது. இப்போதும் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன். இப்பேச்சுவார்த்தையில் ஹுரியத் தலைவர் சையத் அலி ஷா ஜீலானி உள்ளிட்டவர்கள் பங்கேற்க வேண்டும். வன்முறையைக் கைவிட வேண்டும் ஜீலானி வேண்டுகோள் விடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. இது நல்ல அறிகுறி. சமநீதி, கௌரவத்துடன் கூடிய ஒரு தீர்வு அரசியல்ரீதியாக எட்டப்படுவதற்கு நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியம். இப் பிரச்னை தொடர்பாக மத்திய அரசு சில வாக்குறுதிகளை அளித்துள்ளது. அவற்றை நிறைவேற்ற முழு முயற்சிகளை மேற்கொள்வேன். இப்போதுள்ள நிலையில், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதே முன்னுரிமைப் பணியாகும். சட்டம்ஒழுங்கு சீர்குலைவதற்கு எந்தவோர் அரசும் அனுமதிக்காது. மாநிலத்தில் நிலைமை மேம்பட்டால், கடந்த ஆண்டைப் போல பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படும். தேவைப்படும்பட்சத்தில், கூடுதலாகவும் பாதுகாப்புப் படையினர் அனுப்பிவைக்கப்படுவர். ஓங்குகிறது பிரிவினைக் குரல்: கடந்த காலங்களில் காஷ்மீருக்கு ..டி., ..எம்.கள் வேண்டும் என குரல்கள் ஒலித்தன. ஆனால், அந்தக் குரல்களை சுதந்திரம் வேண்டும் என ஒலிக்கும் குரல்கள் இப்போது அடக்கிவிட்டன. ஆனால், இது தாற்காலிக நிலைதான். ..டி. வேண்டும் என்ற குரல் மீண்டும் ஓங்கி ஒலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியாவுடன் இருப்பதே தங்கள் எதிர்காலத்துக்கு நன்மை என்பதை காஷ்மீரிகள் மீண்டும் கூறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தபோதும், மழைபோல பொழியும் கற்களுக்கு இடையே மிகுந்த பொறுமையை பாதுகாப்புப் படையினர் கடைப்பிடித்து வருகின்றனர். காஷ்மீரில் தற்போது வன்முறை குறையத் தொடங்கியுள்ளது. ஆனால், அமைதியின்மை முடிவுக்கு வரத் தொடங்கியுள்ளது என கூற முடியாது. பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தாலும் அது அரசின் நம்பகத்தன்மையைக் குறைத்துவிடும். திங்கள்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம்: இப் பிரச்னை தொடர்பாக அனைத்துக் கட்சியினரையும் பிரதமர் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. காஷ்மீரைச் சேர்ந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புக் கொண்டுள்ளார். அந்த சந்திப்பு வரும் திங்கள்கிழமையே நிகழ வாய்ப்புள்ளது. அதேபோல, நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் பிரதமர் விரைவில் ஆலோசனை நடத்துவார். 370- ரத்து செய்ய முடியாது: எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி கோரியது போல, மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துள்ள அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்ய முடியாது. 63 ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்னைக்கு 370-வது பிரிவை நீக்குவது தீர்வாக அமையாது. இந்தியாவுக்கு எதிராகப் பேசவில்லை .நா. பொதுச் செயலர்: காஷ்மீர் பிரச்னை தொடர்பாக இந்தியாவுக்கு எதிரான எந்தக் கருத்தையும் .நா. பொதுச் செயலர் பான் கீ மூன் தெரிவிக்கவில்லை. அவரது அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர்தான் இந்தியாவுக்கு எதிராக அறிக்கை அளித்துள்ளார் என்றார் .சிதம்பரம். பாஜக

மாநிலங்களவையில் பாஜக தலைவர் அருண் ஜேட்லி பேசியதாவது: காஷ்மீரில் நிலைமை எல்லைமீறிப் போய்விட்டதையே அங்கு நடைபெறும் சம்பவங்கள் காட்டுகின்றன. இந்நிலையில், அவசரப்பட்டு எந்தவிதமான சலுகை அறிவிப்புகளையும் அரசு வெளியிடக் கூடாது. அப்படி அறிவித்தால், நமது கனவு என்றாவது நிறைவேறும் என்ற எண்ணத்தை பிரிவினைவாதிகளுக்கு உருவாக்கிவிடும். பயங்கரவாதிகள் மூலம் தீவிரவாத நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, வன்முறையில் ஈடுபட மக்களை பாகிஸ்தான் தூண்டுகிறது என்றார் ஜேட்லி.

Exit mobile version