Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காஷ்மீர் ஒரே நாளில் 17 பேர் போலீஸ் சூட்டில் பலி.

காஷ்மீர் மக்களின் சுயாட்சிக்கான போராட்டம் அதன் உச்ச நிலையை அடைந்துள்ளது. இராணுவத்தை அனுப்பி மக்களை ஒடுக்கலாம் என்று நினைத்த இந்தியாவின் கனவுகள் தகர்ந்துள்ள நிலையில் நேற்றைய கலகங்களை அடக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 17 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. பாராமுல்லா மாவட்டம் தங்மார்ங் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றை வன்முறையாளர்கள் சூறையாடி தீ வைத்தனர். இதனையடுத்து அவர்களைக் கலைக்க போலீஸôர் தடியடி நடத்தினர். இருந்த போதிலும் வன்முறை கட்டுக்குள் வராததால் போலீஸôர் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்; 20-க்கும் மேலானோர் காயமடைந்தனர். வட்டத்தின் பிற இடங்களில் வட்டார வளர்ச்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், சுற்றுலா வளர்ச்சித்துறை அமைத்திருந்த இரண்டு குடில்கள், சமூக வளர்ச்சி அலுவலகம் மற்றும் அங்கிருந்து வானங்கள் ஆகியவற்றுக்கு கிளர்ச்சியாளர்கள் தீவைத்தனர். அக்கட்டடங்கள் கொழுந்து விட்டு எரிந்தன. இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து பாரமுல்லா மாவட்டத்தில் இருவேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த, 3 இளைஞர்கள் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்தனர். இதே மாவட்டத்தின் சோபூர் பகுதியில் வன்முறையாளர்களுக்கு எதிராக போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். தலைநகர் ஸ்ரீநகரின் சில இடங்களில் இளைஞர்கள் கூடி போலீஸôர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களது வன்முறை எல்லை மீறியதை அடுத்து போலீஸôர் துப்பாக்கியால் சுட்டு அவர்களை கலைத்தனர். இதில் காயமடைந்த இரண்டு இளைஞர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தனர். இதனிடையே காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தில்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரத்தை திரும்பப் பெறுவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சுமார் 15 நிமிஷங்கள் இருவரும் பேசினர். அப்போது மாநிலத்தின் சில பகுதிகளில் பாதுகாப்புப் படைக்கான கூடுதல் அதிகாரத்தை திரும்பப் பெற வேண்டும், வன்முறையைக் கட்டுப்படுத்த அரசியல் ரீதியாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று ஓமர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. காஷ்மீரில் இயல்பு நிலையை ஏற்படுத்த மத்திய அரசுடன் இணைந்து அனைத்து தரப்புக்கும் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சந்திப்புக்குப்பின் ஓமர் அப்துல்லா தெரிவித்தார். ஆனால் காஷ்மீரிகளின் இந்தப் போராட்டத்தை மதக் கலவரமாக திசை திருப்பி அதை ஒடுக்கும் முயற்சியை இந்தியா துவங்கியுள்ளது.

Exit mobile version