Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காஷ்மீர் உரிமைப் போராட்டம்-உச்சக்கட்ட அடக்குமுறை.

காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் அதன் உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளது பள்ளத்தாக்கில் மக்கள் நேரடியாக இந்தியப் படைகளோடு மோதி வருகிறார்கள்

. இப்போராட்டத்தை அடக்க முடியாமல் இந்தியா பொது மக்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி வருகிறது. என்பதோடு மேலதிகமான இராணுவப்படைகளை இறக்கி வருகிறது.நேற்றைய கலங்களில் ஐந்து பேர் இராணுவச் சூட்டுக்கு பலியாகினர். போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குவதை தடுக்க கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை ஒலிபெருக்கி மூலம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. மேலும் வானொலி மூலமும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டது.பொது மக்கள் மீதான இராணுவ அத்து மீறலை பாகிஸ்தான் உளவு அமைப்பின் எதிர்வினையாகச் சித்தரிக்கிறட்து இந்தியா.காஷ்மீரில்

செவ்வாயன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் இரண்டு பேர் கொல்லப்பட்ட தைத் தொடர்ந்து, பலியா னோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல் காரணமாக அங்கு ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.இருப்பினும் ஊரடங்கு உத் தரவை மீறி, ஸ்ரீநகரில் உள்ள கமார்வாரி என்ற இடத்தில் ஆர்ப் பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடு பட்டனர்.இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அவர் களை கலைந்து செல்லுமாறு கேட்டும், அவர்கள் அங்கி ருந்து நகர மறுத்தனர்.அவர்களை கலைக்க பாது காப்புப் படையினர் துப்பாக் கிச் சூடு நடத்தினர்.இதில் மெஹ் ராஜ் அகமது லொனே என்ற 25 வயது இளைஞர் ஒருவர் பலி யானார்; 3 பேர் காயமடைந் தனர்.அதேபோன்று ஈத்ஹா பகு தியில் போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புப் படை யினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அனிஷ் குர்ஷித் என் பவர் பலியானார்.ஷேக்போரா பகுதியில் பல எச்சரிக்கை அறிவிப்புகளுக்குப் பின்னரும், கட்டுக்கடங்காத கலவரக் கும்பலொன்று பாது காப்புப் படையினர் மீது கற் களை வீசித்தாக்கினர். இதன் விளைவாக பாதுகாப்புப் படை யினர் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். துப்பாக்கிச் சூட் டில் காயம்பட்ட இருவர் மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.

பிரிவினைவாதத் தலைவ ரான சையத் அலி கிலானி, சோரா மருத்துவ அறிவியல் நிலையத்திற்கு முன்பாக அமை தியான ஊர்வலத்திற்கு அழைப்பு விடுத்தார். ஊர்வலம் தியா கிகள் கல்லறையை நோக்கிச் செல்லும் என்று தெரிவித்தார். தாமே ஊர்வலத்தை முன் னின்று நடத்தப்போவதாகவும் தெரிவித்தார். எனினும் அதிகாரிகள் ஊர டங்கு உத்தரவைத் தளர்த்த வில்லை. சாலைகளில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக் கப்பட்டிருந்தன. கடைகள், கல்வி நிறுவனங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள், மற்ற அனைத்து வியாபார நிறுவனங் களும் அடைக்கப்பட்டிருந்தன.இதனிடையே, காஷ்மீர் பள் ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள வன் முறையை ஒடுக்குமாறு பாது காப்புப் படைகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. அவசிய மான நிலை ஏற்பட்டாலொ ழிய துப்பாக்கிகளை எடுக்க வேண்டாம் என்று கூறப்பட் டுள்ளது. அவசியமான பாது காப்பு ஏற்பாடுகளை மேற் கொள்ளுமாறு உத்தரவிடப் பட்டுள்ளது.

கூடுதல் படை:

காஷ்மீர் பள்ளத்தாக்கில், கடந்த ஒரு மாத காலமாக நடந்து வரும் போராட்டங்கள், கலகங்கள், ஆர்ப்பாட்டங்கள் பல உயிர்களைப் பறித்துள்ளது. இதனால் மத்திய அரசு மேலும் அதிக பாதுகாப்புப் படை களை காஷ்மீருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலைமை திரும்புவதே அனைத்துக் கட்சிகள் மற்றும் நிர்வாகத்தின் விருப்பமும் ஆகும் என்று முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறினார்.திங்களன்று பிரதமர் மன் மோகன்சிங், உள்துறை அமைச் சர் .சிதம்பரம் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் னர் நிருபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட உமர் அப் துல்லா, இந்த வன்முறைச் சங்கி லியை உடைக்க வேண்டும் என்று கூறினார். அதன்மூலம் இயல்பு நிலையை மீண்டும் ஏற்படுத்த இயலும். மக்கள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அரசு கட்டடங்களையும் காவல் நிலையங்களையும் தாக் கக்கூடாது. இவ்வாறான செயல் களின் முடிவுகள் எப்போதும் துன்பத்தையே தரும். கட்டுப் பாடற்ற போக்கைக் கைவிடும் படி மக்களைக் கேட்டுக் கொள் கிறேன் என்று தெரிவித்தார்.மத்திய அரசு, காஷ்மீர் விவ காரத்தில் மூன்று முடிவுகளைத் தெரிவித்துள்ளது. முதலாவதாக ஆளுநர் ஆட்சியை அமல்படுத் துவது, இரண்டாவதாக முதல மைச்சரை மாற்றுவது, மூன் றாவதாக அதிக பாதுகாப்புப் படைகiளை அனுப்புவது போன்றவைகளாகும்.

உமர் அப்துல்லா அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்த போதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே சிறந்தது என்று மத்திய அரசு கருதுகிறது. மேலும் அமர் நாத் யாத்திரை, பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் திருப் திகரமாக நடந்து வருகிறது.உமர் அப்துல்லா பத்திரி கையாளர்களிடம் கூறுகையில், நடந்து வரும் போராட்டங் களை யார் நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. பல கல வரங்களுக்குத் தலைவர்களே இல்லை. குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கிறார்கள். எனினும், சட்டம் மற்றும் ஒழுங்கு, அமைதியை ஏற்படுத்து வது அரசின் கடமையாகும். மாநிலத்தில் மக்கள் சட்டத் தைக் கையிலெடுக்காமல் அமைதியாக இருப்பார்களே யானால், வன்முறைச் சக்கரம் நின்று விடும். எனவே, ஊர டங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. அதைத் தவிர வேறு வழியில்லை. ஏற்கெனவே, மாநி லம் முழுவதும் மத்திய துணை ராணுவப் படை நிறுத்தப்பட் டுள்ளது. பாதுகாப்புப் படை யினரின் உதவி தேவைப்படு கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், நான் சிறப்பு அதிரடிப் படையின் உதவியையும் கோரியுள்ளேன். அரசியல்ரீதியான தீர்வுக்கு மத்திய அரசும் மாநில அரசும் தயாராக உள்ளது. எனினும், வன்முறைகள் ஓய்ந்து இயல்பு நிலைமை திரும்பினால் தான் எதுவும் செய்ய முடியும் என்றார்.

மற்றொரு கேள்விக்குப் பதி லளித்த உமர் அப்துல்லா, காஷ் மீரி இளைஞர்களுக்கு மறு வாழ்வு, நிவாரண உதவிகள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு வெளியே சிதறிக் கிடக்கும் இளைஞர்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு, இளைஞர்களின் எதிர்காலம் போன்ற அனைத்துப் பிரச்சனைகளும் கவனத் தில் கொள்ளுவோம் என்று தெரிவித்தார்.

Exit mobile version