Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காஷ்மீர் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள்.

காஷ்மீர் போராட்டம் இந்திய மேலாதிக்கத்திற்கு எதிரானதாக மட்டுமல்லாமல் ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கு எதிரானதாகவும் உருமாற்றம் அடைந்துள்ளதால் டில்லி ஆட்சியாளர்கள் காஷ்மீர் மக்கள் மீது உச்சக் கட்ட கொதிநிலையை அடைந்துள்ளனர். காஷ்மீர் முழுக்க அமெரிக்க அதிபர் ஓபாமாவின் கொடும்பாவி கொளுத்தப்பட்டதோடு அமெரிக்க எதிர்ப்புக் கோஷங்களையும் மக்கள் எழுப்பினர்.ஊரடங்கு உத்தரவையும் மீறி மக்கள் தெருக்களில் திரண்டு இந்திய, அமெரிக்க சக்திகளுக்கு எதிராக பெருந்திரள் போராட்டங்களை நடத்தினர்.இந்த மோதல் சம்பவம் பற்றி மற்ற நகரங்களுக்கும் தகவல் பரவியது. இதனால் பாரமுல்லா மாவட்டத்தில் கடும் பதட்டம் நிலவுகிறது.தொடர்ந்து கலவரம் பரவி வரு வதைத் தொடர்ந்து பட்காம் டவுன், சுன், மிர்குந்த், ஓம்பூர், ஒர்கரா, ஷேக்பூர், கம்கமா, .ஜி.ரோடு, குல்வான்பூர், நதீர் குந்த், சத்துரா, வதுரா ஆகிய நகரங்களுக் கும் ஊரடங்கு விரிவுபடுத்தப்பட்டது.

இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

குரான் எரிக்கப்பட்டதாக வெளி யான செய்தியால் ஏற்கனவே பெரும் போர்க்களமாக காணப்படும் காஷ்மீ ரில், நிலைமை மேலும் மோசமாகி யுள்ளதால் மத்திய அரசும், மாநில அர சும் செய்வதறியாமல் திகைத்து நிற் கின்றன.இந்த நிலையில், காஷ்மீர் நிலைமை தொடர்பாக புதனன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. திங்களன்று மாலை பாதுகாப்புக் கான அமைச்சர வைக் குழு கூட்டம் பிரதமர் மன்மோ கன் சிங் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தின் முடிவில் செப்டம்பர் 15 புதன்கிழமை அனைத்துக் கட்சிக் கூட் டத்தை நடத்த மத்திய அரசு முடிவு செய் தது. காஷ்மீரில் நடந்து வரும் கலவ ரத்தை அடக்குவதற்கு பேச்சுவார்த்தை ஒன்றே வழி என அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. காஷ்மீரில் அமைதி திரும்ப அனைத்து நடவடிக் கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.துப்பாக்கிச்சூட்டை நிறுத்துக: தாரிகாமி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜம்முகாஷ்மீர் மாநிலச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான முகமது யூசுப் தாரிகாமி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை மட்டும் பெரும் எண்ணிக்கையில் உயிர்ப்பலி நடந்திருப்பது குறித்து கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.காஷ்மீர் மக்கள் அனைவரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் இந்த உயிர்ப்பலிகளை தடுத்து நிறுத்த அரசு உடனடியாக செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தாரிகாமி, போராட்டக்காரர்களை எதிர்கொள்ளதுப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது என்ற கோட்பாட்டை அரசு நிர்வாகம் உறுதிபட செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், காஷ்மீர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இத்தகைய போராட்டங்களை வன்முறைக்களமாக்க விரும்புவோரை அனுமதிக்காமல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள அவர், வன்முறைகள் நீடித்தால் காஷ்மீரத்தின் சாதாரண ஏழை எளிய மக்களது வாழ்க்கை மேலும் சீர்குலையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version