Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காஷ்மீரில் தொடர்கிறது மக்கள் போராட்டம். இராணுவம் திணறல்.

கடந்த பல மாதங்களாக காஷ்மீர் மக்கள் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு இராணுவத்திடம் இருந்தும் இந்திய ஆக்ரமிப்பு இராணுவத்திடம் இருந்தும் சுயாட்சிக் கோரி போராடி வருகிறார்கள். இராணுவ பலம் ஏதும்மற்ற காஷ்மீர் போராட்டம் மக்கள் வன்முறையாக வெடித்துள்ளது. பயங்கரவாதிகள் என்ற முத்திரையின் மக்கள் ஒடுக்கப்பட்டாலும் சர்வதேச அளவிலான ஜனநாயக சக்திகளின் கவனம் காஷ்மீர் போராட்டத்தின் மீது குவிந்துள்ளதால் இந்தியா இராணுவ ரீதியாக சமாளிக்க முடியாமல் அடக்குமுறையைத் தொடர்ந்து ஏவுகிறது. காஷ்மீரில் திங்கள்கிழமை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸôருக்கு எதிராக கல்லெறி சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில் 5 போலீஸôர் உள்பட 10 பேர் காயமடைந்தனர். ஸ்ரீநகர், பந்திபோரா, ஷோபியான் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை போலீஸôருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 30 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.இருப்பினும் ஸ்ரீநகர் உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டம் கூட்டமாக வந்து போலீஸôர் மீது கல்லெறிந்தனர். கூட்டத்தைக் கலைக்க போலீஸôர் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில் 5 போலீஸôர் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.

Exit mobile version