Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

  காவல்துறையினரால் இங்கினியாகல பகுதியில் நேற்று முன்தினம் (21) இரவு 7.45 அளவில் கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவர் சேனாநாயக்க சமுத்திரத்தின் தெற்குப்பகுதி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து நேற்று அதிகாலை மொரகஹபள்ளம பிரதேச மக்கள் காவல்துறையினருக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் டயர்களைக் கொளுத்தி, கறுப்புகொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொரகஹபள்ளம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான ஈ.ஏ.சமன் திலகசிறி என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்று முன்தினம் இரவு மூன்று பேர் அடங்கிய காவல்துறைக் குழுவினரால்  கைதுசெய்யப்பட்டார்.

Exit mobile version