Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கார்ல் மார்க்ஸ் சொன்னது உண்மையாகிறது : கார்டியன்

‘கார்ல் மார்க்ஸ் சொன்னது உண்மையாகிறது. ஒவ்வொரு கோணத்திலிருந்தும் முதலாளித்துவ பொருளியல் அடிவாங்கிக் கொண்டிருக்கிறது. ‘ என்றவாறு பிரித்தானியாவின் பிரபல முதலாளித்துவப் பத்திரிகையான கார்டியன் ஆசிரியத்தலையங்கம் தீட்டியுள்ளது. 16.09.2008 இல் வெளியான இதழில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் ‘கசீனோ முதலாளித்துவம்’ மாற்றி எழுதப்பட வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர,
இங்கிலாந்து கன்ரபரி மதகுருவான ருவான் வில்லியம்ஸ் கூறிய கருத்தும் பலரின் கவனத்திற்குள்ளானது.
உலகப் பொருளாதாரநெருக்கடி பற்றிக் குறிப்பிட்ட அவர்,நவீன கம்யூனசத்தின் நவீன தந்தையான கார்ல் மார்க்ஸ், முதலாளித்துவம் பற்றி விமர்சித்தது பகுதியாகச் சரியானதே என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version